சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் வாரிசு. அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், வணிக துலாவியலில் சிறந்து விளங்குகிறார்.
Sunrisers Hyderabad IPL கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன், கலாநிதி மாறனுக்கும் (Kalanithi Maran) காவேரி மாறனுக்கும்(Kavery Kalanithi) தம்பதிக்கு1992ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிறந்தவர் இந்த காவ்யா மாறன். தாயார் காவேரி மாறன் சோலார் டிவி கம்யூனிட்டியின் (Solar TV Communication) CEOவாக உள்ளார். இவர், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண்மணிகளில் ஒருவராக விளங்குகிறார்.
25
காவ்யாமாறனின் குடும்பம்
காவ்யாமாறனின் குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது. தந்தை கலாநிதி மாறன் மறைந்த முன்னாள் முதவரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பேரன். காவ்யாமாறனின் சித்தபா தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். காங்கிரஸ்-திமுக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார்.
35
காவ்யா மாறன் கல்வி
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்ற காவ்யா மாறன், இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். தனது தனித்துவமான பன்முகப் பொறுப்புகளுக்கு வலுவான கல்விப் பின்னணியைக் கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
காவ்யாமாறனின் தந்தை கலாநிதி மாறன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.19000 கோடி. காவ்யா மாறனின் நிகர சொத்து மதிப்பு சுமார். ரூ.409 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) ஐபிஎல் அணியை திரம்பட நிர்வகித்து வரும் காவ்யா மாறன், சன்டிவி நெட்வொர்க்கின் வணி நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
55
Sunrisers Hyderabad (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்) அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறன் கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மிகவும் பிஸியாக காணப்பட்டார். மொத்த இணையதளமும் அவரையே மொய்த்தது என்றால் மிகையல்ல. இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த Sunrisers Hyderabad ஐபிஎல் அணியின் CEOவாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.