300 நாளில் கைமேல் பலன் கிடைக்கும்! எக்கச்செக்க வட்டியுடன் சிறப்பு பிக்சட் டெபாசிட்!

Published : Dec 19, 2024, 11:29 PM IST

பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சில புகழ்பெற்ற வங்கிகள் 31 டிசம்பர் 2024 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 8.10% வட்டியை வழங்குகின்றன.

PREV
16
300 நாளில் கைமேல் பலன் கிடைக்கும்! எக்கச்செக்க வட்டியுடன் சிறப்பு பிக்சட் டெபாசிட்!

நீங்கள் இப்போது கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பிக்சட் டெபாசிட்களுக்கு 7% முதல் 7.5% வட்டியை மட்டுமே பெறுகிறீர்கள் என்றால், உங்கள் பணத்தை சிறந்த விகிதத்தில் முதலீடு செய்ய இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதிக வருமானம் தரும் சில சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

26

ஐடிபிஐ (IDBI) வங்கி 300 நாட்கள், 375 நாட்கள், 444 நாட்கள் மற்றும் 700 நாட்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது. UTSAV FD திட்டத்தின் கீழ் 31 டிசம்பர் 2024 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும்.

36

மற்ற வங்கிகள் 300 நாட்கள், 375 நாட்கள், 444 நாட்கள் மற்றும் 700 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 7.35% முதல் 7.20% வட்டியை மட்டுமே வழங்குகின்றன. மூத்த குடிமக்களின் FD கணக்கிலும் 7.55% முதல் 7.70% மட்டுமே வழங்கி வருகின்றனர்.

46

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி பல்வேறு காலக்கெடுவுடன் கூடிய பல சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. வங்கியின் இணையதளத்தின்படி, இந்த சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசித் தேதி 31 டிசம்பர் 2024 ஆகும். 222 நாட்கள் கொண்ட சிறப்பு FD திட்டத்தில் 6.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 333 நாட்களுக்கு 7.20% வட்டியை வழங்குகிறது.

56

444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் கணக்குகளில் பொது குடிமக்களுக்கு 7.30% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 555 நாட்களுக்கு 7.45%, 777 நாட்களுக்கு 7.25%, 999 நாட்களுக்கு 6.65% வட்டி விகிதம் கொடுக்கிறது.

66

மூத்த குடிமக்கள் 180 நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான நாட்கள் முதலீடு செய்தால், 3 கோடி ரூபாய்க்கும் குறைவான FDகளுக்கு 0.50% கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். 555 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 4% முதல் 7.95% வரையிலான வட்டி விகிதங்களைப் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories