QR கோடு மூலம் திருடும் சைபர் கிரிமினல்கள்! மோசடியைத் தவிர்ப்பது எப்படி?

First Published | Dec 19, 2024, 8:30 PM IST

இப்போதெல்லாம் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துகிறார்கள். கடைகளில் சிறிய செலவுகள் செய்தாலும் QR குறியீட்டை ஸ்கேட் செய்து பேமெண்ட் செய்கிறார்கள். ஆனால், இந்த QR கோடு மூலம் ஆன்லைன் மோசடிகளும் அதிரித்துள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இணைய மோசடி தொடர்பான பல வழக்குகளில் QR மூலம் ஏமாற்றப்பட்டதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

ஆன்லைனில் பணம் செலுத்தும் போக்கு அதிகரித்துள்ளதால், மக்கள் இப்போது ரொக்கப் பணத்தை வைத்திருப்பதற்குப் பதிலாக ஆன்லைன் பேமெண்ட்டை நம்பத் தொடங்கியுள்ளனர். கடைகள், உணவகங்கள், ஷோரூம்கள் அல்லது தெரு வியாபாரிகளிடம் கூட QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். இது எளிதான பணம் செலுத்தும் முறையாகவும் உள்ளது.

Tap to resize

QR குறியீடு மூலம் பேமெண்ட் செய்யும்போது கணக்கு எண் தவறாக இருப்பதற்கும், பணம் வேறு எங்கும் செல்வதற்கும் வாய்ப்பில்லை. இதனால் பலர் இதை பாதுகாப்பானதாகக் கருதி, QR குறியீடு மூலம் பணம் செலுத்துகிறார்கள். மக்களின் இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, க்யூஆர் குறியீடுகள் மூலம் மோசடிகள் அதிகமாக நடக்கின்றன.

QR code scams- Never scan in public places! Know 6 ways to protect yourself from fakes

க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து லாட்டரியை வெல்லலாம் என்று உங்கள் மொபைலில் எஸ்எம்எஸ் வந்தால் அது மோசடியாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சைபர் குண்டர்கள் லாட்டரி மூலம் பெரிய தொகையை வெல்லலாம் என்று ஆசை காட்டி, தீங்கிழைக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வைக்கிறார்கள். நீங்கள் ஸ்கேன் செய்து PIN நம்பரை டைப் செய்தால் உங்கள் கணக்கில் இருந்து ஒரு நிமிடத்தில் பெரிய தொகை காணாமல் போய்விடும்.

இந்த மோசடியைத் தவிர்ப்பது எப்படி? இதுபோன்ற இணைய மோசடிகளைத் தவிர்க்க, இந்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு சில வழிகாட்டுதல்களைப் பகிர்ந்துள்ளது. QR குறியீட்டை யார் அனுப்புகிறார்கள் என்பது முக்கியம். QR குறியீடு பணம் செலுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் கிடைக்கும் என்று எந்த சாத்தியமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஸைப் பயன்படுத்தினால், வலுவான ஸ்கிரீன் லாக் இருப்பதை உறுதிசெய்யுங்கள். உங்கள் PIN நம்பரை யாருடனும் பகிர வேண்டாம்.

Vehicles qr code

தவறுதலாக ஏதாவது ஆன்லைன் மோசடியில் சிக்கினால், எங்கே புகார் செய்யலாம்? அதற்கு சில எளிய வழிகள் உள்ளன. எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் சிலர் இதுபோன்ற QR code மோசடிக்கு ஆளாகிவிடுகிறார்கள். அவர்கள் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம். 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

Latest Videos

click me!