Central Govt Employees
மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவர இருக்கிறதா? என்று தேஜ்வீர் சிங் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று கூறினார்.
Jitendra Singh
ஓய்வுபெற விரும்பும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதை அதிகரிக்க அரசாங்கம் ஏதேனும் திட்டத்தை வகுத்துள்ளதா என்றும் அத்தகைய திட்டத்திற்கான நிபந்தனைகள் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். மத்திய அரசு ஊழியர்களுக்கு தாமதமாக ஓய்வு அளிக்கும் வகையில் எந்த திட்டமும், முன்மொழிவும் வகுக்கப்படவில்லை என்று ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
Govt Employees Retirement Age
ஓய்வு பெறும் வயதில் உள்ள நெகிழ்வுத்தன்மை குறித்த கேள்விக்கு, ஓய்வு பெறும் வயதில் நெகிழ்வுத்தன்மை அளிப்பது பற்றி புதிய கொள்கை எதுவும் இல்லை என்றார். ஆனால், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பணியாளர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு ஏற்கனவே வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் விளக்கினார்.
Govt employees pension
"பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் மத்திய அரசு ஊழியர்கள், மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021, அகில இந்திய சேவைகள் (இறப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள்) விதிகள், 1958, முதலியவற்றின் கீழ் முன்கூட்டியே ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது" என அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
Early retirement scheme
முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான வழிகள் ஏற்கெனவே இருக்கும் வேளையில், புதிதாக ஓய்வூதிய வயது தொடர்பான பெரிய மாற்றங்கள் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை அமைச்சரின் பதில் உறுதிசெய்துள்ளது.