Gold Bond: இந்த தங்க பத்திரம் வாங்கியிருக்கீங்களா? ரூ.1 லட்சம் இன்று ரூ.4.18 லட்சம்.. ஆர்பிஐ அறிவிப்பு!

Published : Jul 17, 2026, 07:55 AM IST

Gold Bond: தங்க பத்திரம் (எஸ்ஜிபி) 2019-20 Series II-ல் முதலீடு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 16, 2026 முதல் இந்தத் தொடரில் முதலீடு செய்தவர்கள், ஆர்பிஐ விதிகளின்படி முன்கூட்டியே தங்களது முதலீட்டை மீட்டெடுக்கலாம்.

PREV
13
தங்க பத்திரம்

எஸ்ஜிபி ​​2019-20 தொடர் II ஜூலை 16, 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தொடரில் முதலீடு செய்தவர்கள், 5 ஆண்டுகள் நிறைவடைந்த, வட்டி வழங்கப்படும் தேதிகளில் முன்கூட்டியே முதலீட்டை மீட்டெடுக்கலாம். இந்த வசதி ஆர்பிஐ விதிகளின் கீழ் வழங்கப்படுகிறது.

விலை எப்படி கணக்கிடப்படுகிறது?

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி மீட்பு விலை 999, தூய்மை தங்கத்தின் முந்தைய மூன்று வேலை நாட்களின் சராசரி முடிவு விலையை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையை India Bullion and Jewellers Association (IBJA) வெளியிடுகிறது. எனவே, இறுதியாக கிடைக்கும் தொகை அன்றைய தங்க விலையைப் பொறுத்து மாறுபடும்.

23
எஸ்ஜிபி-யின் முக்கிய நன்மைகள்

எஸ்ஜிபி-யில் முதலீடு செய்வதன் மூலம்:

  • தங்க விலை உயர்வின் பலன் கிடைக்கும்.
  • ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டி வழங்கப்படும்.
  • மெச்சூரிட்டி வரை வைத்திருந்தால், நடைமுறையில் உள்ள வரி விதிகளின்படி மூலதன ஆதார வரி (மூலதன ஆதாய வரி) விலக்கு கிடைக்கும்.
  • இதனால், நீண்டகால முதலீட்டாளர்களிடையே எஸ்ஜிபி ஒரு பிரபலமான முதலீட்டு கருவியாக உள்ளது.
33
இப்போது பணத்தை எடுப்பதா?
  • நிதி நிபுணர்களின் கருத்துப்படி, இந்த முடிவு உங்கள் தனிப்பட்ட நிதி தேவையைப் பற்றியது.
  • உடனடியாக பணம் தேவைப்பட்டால், முன்கூட்டியே மீட்டெடுப்பதை பரிசீலிக்கலாம்.
  • வரிச் சலுகை மற்றும் நீண்டகால முதலீட்டு பலன்களை முழுமையாகப் பெற வேண்டும், மெச்சூரிட்டி வரை வைத்திருக்கலாம்.
  • முடிவு எடுப்பதற்கு முன் தற்போதைய தங்க விலை, எதிர்கால சந்தை நிலவரம் மற்றும் உங்கள் நிதி இலக்குகளை மதிப்பீடு செய்வது நல்லது.

செலவுகள் அதிகமா? மத்திய அரசின் இந்த 5 திட்டங்கள் உங்கள் குடும்பத்திற்கு உதவலாம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories