முதலில், எந்த மின்னணு சாதனத்தையும் ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்வது தவறு. ஏசி, டிவி, மொபைல் சார்ஜர் போன்றவை பயன்படுத்தி முடிந்தவுடன் ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும். இல்லையெனில், அவை மறைமுகமாக மின்சாரத்தை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கும். அடுத்ததாக, சாதாரண விசிறிகளுக்கு பதிலாக BLDC பேன்கள் பயன்படுத்தினால் 50% வரை மின்சார சேமிப்பு கிடைக்கும்.
5 ஸ்டார் ரேட்டிங் கைகொடுக்கும்
வாட்டர் ஹீட்டரை நீண்ட நேரம் ஆன் நிலையில் வைப்பது மின்சாரத்தை அதிகம் உறிஞ்சும். எனவே, தேவையான நேரத்தில் மட்டுமே ஹீட்டரை ஆன் செய்ய வேண்டும். அதேபோல், புதிய ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்கும்போது அவற்றின் ஸ்டார் ரேட்டிங்கைப் பார்த்து வாங்குவது அவசியம். 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்கள் அதிக மின் சேமிப்பை வழங்கும்.