இரண்டாவது, மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஆன்லைன் சேவை மையம் தொடங்கலாம். ரீசார்ஜ், மின்சாரம், கேஸ், DTH பில் கட்டணம், ஆன்லைன் விண்ணப்பங்கள் போன்ற சேவைகள் மூலம் கமிஷன் வருமானம் பெற முடியும். ஒரு ஸ்மார்ட்போன், இணைய இணைப்பு மற்றும் அடிப்படை அறிவு இருந்தால் இந்த தொழிலை எளிதில் நடத்தலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் இதற்கு நல்ல தேவை உள்ளது.
மூன்றாவது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்கள் தயாரிப்பு. பேப்பர் கவர்கள், துணி பைகள் போன்றவற்றுக்கு இன்றைக்கு அதிக வரவேற்பு உள்ளது. காகிதம், துணி மற்றும் பிரிண்டிங் செலவுகள் சேர்த்து ரூ.7,000–ரூ.10,000 முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். அருகிலுள்ள கடைகள், மார்க்கெட்டுகளில் நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
நான்காவது, வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு விவசாய முயற்சி. சிறிய இடத்திலேயே கீரைகள், மூலிகைகள், மிளகாய் போன்றவற்றை வளர்த்து விற்கலாம். விதைகள், குடுவைகள், மண் உள்ளிட்டவற்றுக்கு குறைந்த செலவுதான். இது குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்து, கூடுதல் வருமானத்தையும் தரும்.