
சிலர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை செய்தாலும், சிலர் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ எப்படியாவது ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலக்கோடு இருக்கின்றனர். அந்த வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க உதவும் சில பிசினஸ் ஐடியாக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாக்லேட் தயாரிப்பு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது சாக்லேட் மற்றும் ஸ்வீட் தான். அதிலும் சாக்லேட்களுக்கு மத்தியில் எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அதிலும் வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் ஸ்வீட் என்றால் சொல்லவா வேண்டும். எனவே சாக்லேட் தயாரிக்கும் பிசினஸை ரூ.10000 என்ற குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பலரும் லாபம் ஈட்டி வருகின்றனர். இதன் மூலம் மாதம் ரூ.30000 வரை லாபம் ஈட்டி வருகின்றனர்.
கோலி சோடா :
சிறு வயதில் கோலி சோடா வாங்கி குடித்திருப்போம். அப்போது அதன் விலை ரூ.5 மட்டுமே இருந்திருக்கும். ஆனால் தற்போது இந்த கோலி சோடா பிசினஸ் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிசினஸுக்கு தேவையான பொருட்கள் வாங்க ரூ.50000 என்ற முதலீட்டில் இதை தொடங்கலாம். தற்போது கோலி சோடாவில் பலர் ஃபிளேவர்களை சேர்த்து ஒரு பாட்டில் ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுகிறது. இந்த பிசினஸில் மாதம் ரூ.50000 வரை லாபம் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தரமான முறையில் கோலி சோடா தயாரித்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
டெயிலரிங் தொழில் :
டெயிலரிங் தொழில் என்பது எவர்கிரீன் பிசினஸ் ஆகும். ஆம். தங்களுக்கு விருப்பமான முறையில் ஆடைகளை கஸ்டமைஸ் செய்து அணிய வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். எனவே ரூ.50000 என்ற முதலீடட்டில் தையல் பிசினஸை தொடங்கலாம். இந்த டெயிலரிங் பிசினஸில் 40 முதல் 60% வரை லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இது லாபகரமான தொழில்களில் ஒன்றாகும்.
டிபன் கடை அல்லது ஹோட்டல்
இன்றைய அவசர வாழ்வில் பலரும் சமைப்பதை தவிர்த்து ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் தினமும் ஹோட்டலில் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வீட்டில் தயாரிக்கப்படும் அதே தரத்துடன் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கும் டிபன் கடைகள், கேட்டரிங் சர்வீஸ் போன்றவற்றை தொடங்கலாம். அலுவலகங்கள், பொது இடங்கள் என குறிப்பிட்ட இடங்களில் நடமாடும் வண்டிகளில் வழங்கினால் இந்த தொழிலில் நல்ல லாபம் ஈட்டலாம். ரூ.50000 என்ற முதலீட்டில் இந்த தொழிலை தொடங்கலாம். மேலும் இதில் மாதம் ரூ.50000 வரை லாபம் கிடைக்கும்.
பேப்பர் பிளேட், பேப்பர் கப் பிசினஸ்
தற்போது பேப்பர் பிளேட், பேப்பர் கப் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. சுப நிகழ்ச்சிகள் தொடங்கி ஹோட்டல், டீக்கடை வரை பல இடங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது. தற்போது பலரும் பாக்குமட்டை தட்டுகளை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருட்களை தயாரிக்கும் பிசினஸை தொடங்கலாம். இந்த மெஷினின் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும். எனவே இதற்கு கூடுதல் முதலீடு தேவை. இதற்கு முத்ரா கடன் போன்ற கடனுடதவி மூலம் இந்த தொழிலை தொடங்கலாம். இதிலும் நல்ல லாபம் கிடைக்கும்.