15x15x15 ஃபார்முலா தெரியுமா? 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும் ஸ்மார்ட் முதலீட்டுத் திட்டம்!

First Published | Nov 15, 2023, 9:07 PM IST

முதலீட்டாளர்கள் 25 வயதில் 15X15X15 ஃபார்முலாவைப் பின்பற்றி முதலீடு செய்யத் தொடங்கினால், 40 வயதிற்குள் கோடீஸ்வரராக ஆகலாம்.

SIP Investment Plan

நீங்கள் ஒரு தீவிரமான முதலீட்டு ஆர்வலராக இருந்தால் பெரிய முதிர்வுத் தொகையை உருவாக்க மியூச்சுவல் பண்ட் முதலீடு ஒரு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அல்லது சிப் (SIP) மூலம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால், ஒரு கோடீஸ்வரராகும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கலாம்.

What is 15x15x15 formula?

சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், SIP முதலீட்டில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த முதலீட்டில் கிடைக்கும் வருமானம் சந்தைப் போக்கை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நீண்ட காலத்திற்கு, முதலீட்டைத் தொடர்பவர்களுக்கு இதன் மூலம் 15 மற்றும் 20 சதவீதம் வரை அதிக வருவாய் ஈட்ட முடியும். இந்த முதலீட்டில் கிடைக்கும் சராசரி வருமானம்கூட 12 சதவீதமாக உள்ளது.

Tap to resize

SIP investment benefits

இது தவிர, கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கும். இதனால் முதலீடு செய்யும் பணம் மிக வேகமாக பெருகும். எனவே, எஸ்ஐபி (SIP) மூலம் நீங்கள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக விரும்பினால், 15X15X15 என்ற ஃபார்முலா உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

SIP investment formula

15X15X15 ஃபார்முலாவின் படி, நீங்கள் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்யவேண்டும். இதற்கு 15 சதவீத வட்டியைப் பெறமுடியும். SIP இல் இவ்வாறு நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யும்போது, 15 சதவிகிதம் வட்டி கிடைப்பது பெரிய விஷயம் அல்ல.

15x15x15 formula for investment

15X15X15 என்ற ஃபார்முலாவை பின்பற்றி, மாதம் ரூ.15,000 வீதம் SIP இல் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.27,00,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 15 சதவீத வட்டியைப் பெற்றால், ரூ.74,52,946 கிடைக்கும். இதன் மூலம், முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வட்டியைச் சேர்த்து 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,01,52,946 சேர்ந்துவிடும்.

SIP Investment

எனவே, ஆர்வம் உள்ள முதலீட்டாளர்கள் எவ்வளவு சீக்கிரம் சிப் முதலீட்டில் இறங்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் பணக்காரர் ஆகி விடலாம். 25 வயதில் 15X15X15 ஃபார்முலாவைப் பின்பற்றி முதலீடு செய்யத் தொடங்கினால், 40 வயதிற்குள் கோடீஸ்வரராக ஆகலாம்.

SIP: 15x15x15 formula

ஆனால் இதற்கு உங்கள் வருமானம் மாதம் ரூ.80,000 ஆக இருக்க வேண்டும். நிதித்துறை விதிகளின்படி, சிப் முதலிட்டில் ஒவ்வொரு மாதமும் 20 சதவீத வருமானத்தைச் சேமித்து முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மாத வருமானம் ரூ.80,000 எனில், ஒவ்வொரு மாதமும் ரூ.16,000 அல்லது உங்கள் வருமானத்தில் 20 சதவீதத்தைச் சேமிக்கலாம். அப்போதுதான், SIP முதலீட்டிற்கு மாதம் ரூ.15,000 எளிதாக ஒதுக்க முடியும்,

(பொறுப்புத்துறப்பு: SIP முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் விசாரித்து முடிவு செய்யவும்)

Latest Videos

click me!