ஒரு கோடி சம்பாதிக்க சிறந்த வழி! மாதம் 1,000, 2,000 சேமித்தால் போதும்!!

First Published | Jan 11, 2025, 10:07 PM IST

Mutual Fund SIP calculator: SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான வசதியான வழி. SIP அணுகுமுறை முதலீட்டாளர்களிடையே பிரபலமாக உள்ளன. இந்த அணுகுமுறை சந்தை ஏற்ற தாழ்வுகள் பற்றிய கவலைகளை குறைத்து வருமானத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

Mutual Fund SIP calculator

SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான வசதியான வழி. SIP அணுகுமுறை முதலீட்டாளர்களிடையே பிரபலமாக உள்ளன. இந்த அணுகுமுறை சந்தை ஏற்ற தாழ்வுகள் பற்றிய கவலைகளை குறைத்து வருமானத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

SIP calculator

ஒவ்வொரு ஆண்டும் 10% ஸ்டெப்-அப் உடன் ரூ.1,000 SIP

10% வருடாந்திர ஸ்டெப்-அப் உடன் மாதத்திற்கு ரூ.1,000 முதலீடு செய்து, ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானத்தை எதிர்பார்த்தால், 31 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.02 கோடியை நீங்கள் குவிக்கலாம்.

இதில், உங்களின் மொத்த முதலீடு சுமார் ரூ. 21.83 லட்சமாக இருக்கும். மீதமுள்ள ரூ.79.95 லட்சம் ஈட்டப்பட்ட வருமானமாக இருக்கும்.

Tap to resize

Mutual Fund investment

ஒவ்வொரு ஆண்டும் 10% ஸ்டெப்-அப் உடன் ரூ.2,000 SIP

அதே 10% வருடாந்திர ஸ்டெப்-அப் மூலம் உங்கள் மாதாந்திர SIPஐ ரூ.2,000 ஆக உயர்த்தினால், 12% வருடாந்திர வருமானத்தில் 27 ஆண்டுகளில் ரூ.1.15 கோடியைப் பெறலாம். மொத்த முதலீடு ரூ. 29.06 லட்சமாக இருக்கும். அதே சமயம் வருமானம் உங்கள் கார்பஸுக்கு ரூ. 85.69 லட்சத்தை அளிக்கும்.

1 crore in SIP investment

ஒவ்வொரு ஆண்டும் 10% ஸ்டெப்-அப் உடன் ரூ.3,000 SIP

மாதாந்திர SIP ரூ.3,000, ஆண்டுக்கு 10% அதிகரித்து, 12% வருடாந்திர வருமானம் பெற்றால் 24 ஆண்டுகளில் ரூ.1.10 கோடியை ஈட்டலாம். இந்தக் காலகட்டத்தில், உங்களின் மொத்த முதலீடு ரூ.31.86 லட்சமாக இருக்கும். வருமானம் ரூ.78.61 லட்சமாக இருக்கும்.

How to invest in SIP?

ஒவ்வொரு ஆண்டும் 10% ஸ்டெப்-அப் உடன் ரூ.5,000 SIP

இந்த மாதாந்திர SIP யை ரூ. 5,000 ஆக உயர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்தால், 12% வருடாந்திர வருமானத்தை எதிர்பார்க்கலாம். இதன் மூலம் வெறும் 21 ஆண்டுகளில் ரூ.1.16 கோடியை அடைய முடியும். மொத்த முதலீடு ரூ. 38.40 லட்சமாக இருக்கும், இதன் மூலம் ரூ.77.96 லட்சம் வருமானம் பெறலாம்.

Systematic Investment Plans

ரூ.1,000 SIP முதலீட்டைத் தொடங்கி ஆண்டுதோறும் 10% அதிகரித்தால், நீங்கள் கோடீஸ்வரராக மாற 31 ஆண்டுகள் ஆகும். SIP தொகைய ரூ. 5,000 இல் இருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு ஆண்டும் 10% உயர்த்தினால், 21 ஆண்டுகளில் கோடீஸ்வரராகலாம்.

Latest Videos

click me!