பிக்சட் டெபாசிட்டில் இல்லாத வசதிகள்; ஆனால், அதே வட்டியைக் கொடுக்கும் திட்டம்!

First Published | Jan 11, 2025, 8:28 PM IST

SBI Multi Option Deposit Scheme (MODS): ஸ்டேட் வங்கி மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டம், பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன், முதிர்வுக் காலத்துக்கு முன்பே பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம், மீதமுள்ள தொகைக்கு வட்டி தொடரும்.

SBI Multi Option Deposit Scheme (MODS)

ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல முதலீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. பலர் பிக்சட் டெபாசிட் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், FD திட்டங்களில் இல்லாத வசதியை வழங்குவதுதான் SBI MOD எனப்படும் மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டம்.

SBI Multi Option Deposit Benefits

எஸ்பிஐ மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டத்தில் பிக்சட் டெபாசிட்களில் உள்ள அதே வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தின் தனித்துவமான நன்மை என்னவென்றால், முதிர்வுக் காலத்துக்கு முன்பே எந்த நேரத்திலும் டெபாசிட் செய்த பணத்தை எடுக்கலாம். அதற்கு எந்த அபராதமும் செலுத்தத் தேவையில்லை.

Tap to resize

FD vs MOD in SBI

வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது போல, ஏடிஎம் அல்லது காசோலை மூலம் இந்தப் பணத்தை எடுக்கலாம். இந்த மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டம் வாடிக்கையாளரின் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். எனவே டெபாசிட் செய்பவர்கள் எந்த நேரத்திலும் ஏடிஎம் மூலம் தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

SBI Fixed Deposit Alternative

வழக்கமாக, ஒரு பிக்ஸட் டெபாசிட் கணக்கை உடைக்கும்போது, ​​அதன் முழுத் தொகையையும் திரும்பக் கிடைக்கும். ஆனால் எஸ்பிஐ மல்டி ஆப்ஷன் டெபாசிட்டில் முழுப் பணத்தையும் திரும்ப எடுக்கவேண்டிய கட்டாயம் இல்லை. தேவையைப் பொறுத்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும்.

SBI MOD investment

எஸ்பிஐ மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டத்தில், 1,000 இன் மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். பணத்தை எடுக்கும்போதும் 1,000 இன் மடங்குகளில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை.

SBI MODS interest rates

எஸ்பிஐ MOD திட்டத்தில், ஒரு வருடம் முதல் 5 ஆண்டுகள் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம். முதலீடு செய்யும் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும். 1-2 வருடத்துக்கு 6.8%, 2-3 வருடத்துக்கு 7%, 3-5 வருடத்துக்கு 6.75% வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி கிடைக்கும். இத்திட்டத்துக்கு நாமினியை நியமிக்கும் வசதியும் உள்ளது.

SBI MOD Scheme minimum balance

மல்டி ஆப்ஷன் டெபாசிட் கணக்கை வேறொரு கிளைக்கு மாற்றவும் முடியும். MOD கணக்குடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பைப் பராமரிக்க வேண்டும். இந்தக் கணக்கில் இருந்து கிடைக்கும் வட்டி வரி செலுத்த வேண்டும்.

Latest Videos

click me!