ELSS Funds
ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. ஏனெனில் அவை வரிச் சலுகைகளுடன் கணிசமான வருமானத்தை அளிக்கின்றன. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ், ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்குகளைப் பெற ELSS ஃபண்டுகள் அனுமதிக்கின்றன. ELSS முதலீடுகள் மூன்று வருட லாக்-இன் காலத்தைக் கொண்டவை. இதில் முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. SIP மூலம் ரூ.500 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். இத்தொகுப்பில் அதிக வருமானம் தரும் டாப் 5 ELSS ஃபண்டுகளைப் பார்க்கலாம்.
Quant ELSS Tax Saver Fund – Direct Plan
Quant ELSS Tax Saver Fund - Direct Plan இல் யாராவது ரூ. 10,000 SIP முதலீட்டைத் தொடங்கியிருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் 23.65% CAGR (சிஏஜிஆர்) வருமானத்துடன் ரூ.41.94 லட்சம் கார்பஸ் கிடைத்திருக்கும்.
அதே நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஃபண்டில் ரூ.1 லட்சம் SIP முதலீடு 6.66 லட்சமாக மாறியிருக்கும். சிஏஜிஆர் வருமானம் 20.88%.
Bank of India ELSS Tax Saver Fund – Direct Plan
பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த வரி சேமிப்பு ஃபண்டின் 10 வருட SIP வருமானம் 20.42%. இந்த வருமானத்துடன், 10,000 ரூபாய் முதலீடு, 35.22 லட்ச ரூபாய் கார்பஸாக மாறியிருக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு ரூ.5 லட்சமாக மாறியிருக்கும். சிஏஜிஆர் வருமானம் 17.55%.
JM ELSS Tax Saver Fund – Direct Plan
இந்த ஃபண்டின் 10 வருட SIP வருமானம் 19.79%. இந்த SIP வளர்ச்சி விகிதத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரூ.10,000 SIP முதலீடு ரூ.34.04 லட்சமாக மாறியிருக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் முதலீடு இப்போது ரூ. 4.81 லட்சமாக இருக்கும், இதன் மூலம் 17.01% ஆண்டு வருமானம் கிடைக்கும்.
DSP ELSS Tax Saver Fund – Direct Plan
டிஎஸ்பி ELSS வரி சேமிப்பு ஃபண்டின் 10 வருட SIP வருமானம் 19.01%. இந்த ஃபண்டில் ரூ.10,000 SIP முதலீட்டை 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் கார்பஸ் ரூ.32.79 லட்சமாக வளர்ந்திருக்கும்.
இதேபோல், இந்த ELSS ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இப்போது ரூ. 4.69 லட்சமாக இருக்கும். இதில் ஆண்டு வருமானம் 16.72% ஆக இருக்கும்.
Bandhan ELSS Tax Saver Fund – Direct Plan
பந்தன் ELSS வரி சேமிப்பு ஃபண்டின் 10 வருட SIP வருமானம் 18.11%. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரூ.10,000 எஸ்ஐபி முதலீடு ரூ.31 லட்சமாக வளர்ந்திருக்கும்.
அதேபோல், 16.17% CAGR வருமானத்துடன் இந்த ஃபண்டில் யாராவது ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.48 லட்சம் கார்பஸ் சேர்ந்திருக்கும்.