வரலாறு காணாத வகையில் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,000ஐ நெருங்கி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். அதேபோல பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்ப பெறுவது போன்ற காரணங்களால் தற்போது தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது.