Share Market Today: இன்று லாபத்தை கொட்டிக்கொடுக்கும் 8 பங்குகள்.! வாங்கும் விலையை தெரிஞ்சுக்கலாமே.!

Published : Nov 13, 2025, 09:30 AM IST

அமெரிக்க மற்றும் இந்திய பொருளாதார காரணிகளால் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது. இந்த சாதகமான சூழலில், நிபுணர்கள் ஆட்டோ, ஐடி மற்றும் மருந்து துறைகளில் இருந்து லாபம் தரக்கூடிய 8 முக்கிய பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளனர். 

PREV
110
எதை வாங்கலாம் எவ்வளவு வாங்காலாம்

அமெரிக்க அரசாங்கம் மீண்டும் திறந்தது, மேலும் பீகார் தேர்தலில் NDA வெற்றி வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் உய்ந்துள்ளது. இதனால் சில குறிப்பிட்ட பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித்தரும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். அமெரிக்க வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதும், இந்தியாவில் பணவீக்கம் குறைவதும், வலுவான GDP வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் இரண்டாம் பாதி வருமான நம்பிக்கை ஆகியவை இந்திய பங்குகளுக்கு வலுவாக அமைகின்றன. குறிப்பாக ஆட்டோ, ஐடி மற்றும் மருந்து துறைகள் முன்னிலையில் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நாளில் வாங்க பரிந்துரைக்கப்பட்ட முக்கிய 8 பங்குகள் குறித்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

210
IndusInd Bank பங்கு

IndusInd Bank பங்கு தற்போது ₹864 விலையில் கிடைக்கிறது. இந்த பங்கு நீண்டகால ஒருங்கிணைந்த நிலையை கடந்துவிட்டு மேலே செல்லும் சாத்தியம் உள்ளது. ₹834 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு ₹924 இலக்கை நோக்கி வாங்கலாம்.

310
Max Financial Services பங்கு

Max Financial Services பங்கும் ₹1,719 விலையில் வலுவாக உள்ளது. அனைத்து சராசரி கோடுகளையும் (EMAs) கடந்துள்ளதால் வலுவான டிரெண்ட் தொடரும் என நிபுணர் கூறுகின்றனர். இதற்கான இலக்கு ₹1,840 மற்றும் ஸ்டாப் லாஸ் ₹1,659 ஆகும்.

410
Bajaj Finance பங்கு

Bajaj Finance பங்கு ₹1,012 விலையில் வாங்கலாம். இது ₹990 ஆதரவுடன் ₹1,055 இலக்கை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

510
Tata Elxsi பங்கு

Tata Elxsi பங்கு ₹5,388 விலையில் வலுவாக உள்ளது. இது ₹5,300 என்ற முக்கிய ஆதரவுடன் ₹5,600 வரை மேலோட்டம் காணும் என கூறப்படுகிறது.

610
Eternal Ltd பங்கு

₹307 விலையில் உள்ள Eternal Ltd பங்கும் ₹300 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு ₹322 இலக்கை நோக்கி சிறியகால ரீபவுண்ட் காணலாம் என தெரிவிக்கப்படுகிறது.

710
Bombay Dyeing பங்கு

Bombay Dyeing பங்கு ₹156.95 விலையில் வாங்கத்தக்கது. கடந்த சரிவிலிருந்து மீள்ச்சியைக் காட்டி, RSI ஒவ்வொரு நாளும் மேம்பட்டுள்ளது. ₹153 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு ₹165 இலக்கை நோக்கி விலை உயர வாய்ப்பு உள்ளது.

810
Glenmark Pharmaceuticals பங்கு

மருந்து துறையில் வலுவாக இருக்கும் Glenmark Pharmaceuticals பங்கு ₹1,847 விலையில் உள்ளது. இது ₹1,815 ஆதரவுடன் ₹1,935 இலக்கை நோக்கி மேலே செல்லும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

910
Laxmi India Finance Ltd பங்கு

நிதி துறையில் உறுதியான வளர்ச்சி காணும் Laxmi India Finance Ltd பங்கு ₹151.60 விலையில் கிடைக்கிறது. இது ₹147 ஆதரவுடன் ₹162 இலக்கை நோக்கி மேலே செல்லும் வாய்ப்பு உள்ளது.

1010
26,000 வரை மேலே செல்லும் வாய்ப்பு

மொத்தத்தில், பங்கு சந்தை இன்று முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வண்ணம் திறக்கப்பட்டுள்ளது. நிப்டி குறுகிய காலத்தில் 26,000 வரை மேலே செல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விலைகள் வேகமாக மாறக்கூடியதால், ஒவ்வொரு முதலீட்டாளரும் ஸ்டாப் லாஸ் விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது நிபுணர்களின் முக்கிய ஆலோசனையாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories