வருமான வரித்துறை இப்போது உங்கள் சேமிப்புக் கணக்கில் நடக்கும் பெரிய பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க பரிவர்த்தனை தொடர்புடைய ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்.
சேமிப்புக் கணக்கு (சேவிங்ஸ் அக்கவுண்ட்) என்றாலே பலரும் அதை பணத்தை வைப்பதும், எடுப்பதும் ஒரு சாதாரண இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்போது வருமான வரித்துறை உங்கள் சேமிப்புக் கணக்கில் நடக்கும் முக்கியமான பரிவர்த்தனைகளை நெருக்கமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக, உங்கள் வருமானத்துக்கு பொருந்தாத அளவில் அதிக தொகை வரவு–செலவு நடந்தால், அது தானாகவே வரித்துறையின் ரேடாருக்கு சென்றுவிடும். நிபுணர்கள் கூறுவதுபடி, இன்றைக்கு சாதாரணமாக தோன்றும் சில செயலில் கூட திடீர் வரித்துறை நொட்டீஸ் வரும் வாய்ப்பு உள்ளது.
25
வரித்துறை நோட்டீஸ்
ஒரே நிதி ஆண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் வங்கியில் ரொக்கமாக சேர்த்தால், வங்கி அதை நேரடியாக வரித்துறைக்கு தகவல் அளிக்கும். இது சட்ட விரோதமல்ல; ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என ஆதாரம் கேட்கலாம். அதோடு, கிரெடிட் கார்டுக்கு ரூ.1 லட்சம் அதிகமாக செலுத்தினாலும், வருடத்தில் மொத்தமாக ரூ.10 லட்சம் கட்டினாலும், அது உடனே கண்காணிப்புக்குள் வரும். அதிக முதலீடு, அதிக செலவு ஆகிய இவை அனைத்தும் உங்கள் ITR-ல் காட்டும் வருமானத்துடன் பொருந்துகிறதா என அரசு பார்க்கும்.
35
வங்கி பரிவர்த்தனை கண்காணிப்பு
மேலும், அதிக ரொக்கப் பணத்தை எடுப்பது, நீண்டநாள் செயல்பாடின்றி இருந்த கணக்கில் திடீரென பெரிய பரிவர்த்தனைகள் நடப்பது போன்றவை வங்கியின் சந்தேக பட்டியலில் சேரும். நீங்கள் ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்து வாங்குதல்–விற்பனை செய்தால் கூட ரெஜிஸ்ட்ரார் துறை தகவல் அனுப்பப்படும். இதற்கான காரணம், அந்த பரிவர்த்தனைக்கு தேவையான பணத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தெளிவை வரித்துறை உறுதி செய்ய விரும்புகிறது.
வெளிநாட்டு செலவு, இன்வார்டு ரெமிட்டன்ஸ், அல்லது வருடத்தில் ரூ.10 லட்சம் மேல் இன்டர்நேஷனல் கார்டு டிரான்ஸாக்ஷன் செய்தால் கூட வரித்துறையின் கவனம் செல்லும். வங்கி வழங்கும் வட்டி வருவாய் படிவம் 26AS, AIS-ல் காணப்படும். அதை ITR-ல் காட்டவில்லை என்றால் தானாகவே பொருந்தாத எச்சரிக்கை வரும். பல சேமிப்புக் கணக்குகள் இருந்தால், எல்லா கணக்குகளிலும் வட்டி சேர்த்து காட்டுவது மிக அவசியம்.
55
வருமான வரித்துறை
தேவையற்ற ஆய்வை தவிர்க்க, சில விஷயங்களை கவனிக்க வேண்டும். ITR தாக்கல் செய்வதற்கு முன்பு AIS, படிவம் 26AS சரியாகப் பார்த்து பொருத்தமா என உறுதி செய்ய வேண்டும். பெரிய பரிவர்த்தனைகளுக்கு எல்லாம் ஆதாரம் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களுக்காக செலவு செய்து, அவர்கள் பணத்தை ரொக்கமாகத் திருப்பி கொடுத்தால், அது கூட வரித்துறைக்கு புகும். எனவே, உங்கள் சேமிப்புக் கணக்கில் நடக்கும் ஒவ்வொரு முக்கியமான பரிவர்த்தனையும் வெளிப்படையாகவும், ஆவணங்களுடன் இருக்க வேண்டும்.