2025 ஆம் ஆண்டிற்கான NSE மற்றும் BSE பங்குச்சந்தை விடுமுறை நாட்காட்டியை இந்தக் கட்டுரை வழங்குகிறது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான முக்கிய விடுமுறை நாட்கள் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தேசிய பங்குச்சந்தை (NSE) வெளியிட்ட அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி காரணமாக வர்த்தகம் நடைபெறாது. இது ஆகஸ்ட் மாத இரண்டாவது விடுமுறை நாள் ஆகும். முதல் விடுமுறை ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை கொண்டாடிய தினம். இதனுடன், ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் சந்தை வழக்கம்போல் மூடப்படும்.
25
செப்டம்பர் மாத விடுமுறைகள்
செப்டம்பர் 2025 இல் சிறப்பு சந்தை விடுமுறை இல்லை. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வர்த்தகம் நடைபெறாது. அதாவது, செப்டம்பர் 6-7, 13-14, 20-21 மற்றும் 27-28 தேதிகளில் NSE, BSE இரண்டும் மூடப்பட்டிருக்கும். எனவே, செப்டம்பரில் முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர வேறு இடையூறு இருக்காது.
35
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
அக்டோபர் மாத பல முக்கிய திருநாள்கள் உள்ளன. அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி, அக்டோபர் 21 அன்று தீபாவளி, அக்டோபர் 22 அன்று பலிபிரதிபதா ஆகிய காரணங்களால் சந்தை மூடப்படும். தீபாவளி நாளான அக்டோபர் 21 அன்று மட்டும் முஹூர்த்த வர்த்தகம் நடைபெறும். இது ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் அவளுடன் எதிர்பார்க்கும் சிறப்பு அம்சமாகும்.
நவம்பரில், நவம்பர் 5 அன்று பிரகாஷ் குருபூர்ப் (ஸ்ரீ குருநானக் தேவ் ஜி) காரணமாக சந்தை மூடப்படும். டிசம்பரில், டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக NSE, BSE இரண்டும் மூடப்படும். இவை தவிர, அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழக்கம்போல் சந்தை இயங்காது.
55
முதலீட்டாளர்களுக்கு அவசியமான திட்டமிடல்
சந்தை விடுமுறை நாட்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மிகவும் முக்கியமானவை. திருவிழாக்காலத்தில் சந்தை நகர்வுகள் அதிகமாக மாறக்கூடும். எனவே, விடுமுறை நாட்காட்டியின்படி முதலீட்டு திட்டத்தை வகுப்பது மூலம் தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கலாம். குறிப்பாக, முஹூர்த்த வர்த்தகம் போன்ற சிறப்பு தினங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, நீண்டகால முதலீட்டு உத்தியை சீராகப் பின்பற்ற உதவும்.