Gold Rate Today(August 26): தங்கம் விலையை கேட்டு பெண்கள் மயக்கம் .! நகை கடைக்கு செல்ல ஆண்கள் தயக்கம்!

Published : Aug 26, 2025, 09:50 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதே இதற்குக் காரணம் என நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

PREV
14
தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.!

கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 355 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 400 ரூபாய் அதிகரித்து 74,840 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

24
விலையை பற்றி கவலையில்லை

மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 9 ஆயிரத்து 355 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

34
விலையை முடிவு செய்யும் சர்வதேச நிலவரங்கள்.!

இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரி விதிப்பு திட்டம், உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் நடப்புறவில் ஏற்படும் விரிசல் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல் அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

44
பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிப்பு.!

இந்தியாவிலும் சீனாவிலும் பண்டிகை காலம், திருமண காலம் போன்ற சமயங்களில் நகை தேவைகள் அதிகமாகும். இந்த தேவை அதிகரித்தால் தங்க விலையும் இயல்பாகவே உயர்ந்து விடும். அதேபோல், மத்திய வங்கிகள் (Central Banks) அதிக அளவில் தங்கம் வாங்கினால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் காணப்படும்.

மொத்தத்தில், டாலர் பலவீனம், வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கம் அதிகரித்தல், உலக அரசியல்/பொருளாதார குழப்பம், எண்ணெய் விலை உயர்வு, இந்தியா-சீனாவில் திருமண கால தேவை, மத்திய வங்கிகளின் கொள்முதல் அதிகரித்தல் ஆகியவை தங்க விலை உயர்வுக்கான பிரதான காரணங்களாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories