Aadhaar Card
இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் ஒரு முறை கூட புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அதை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்திருந்தது. அதாவது ஆதாரை புதுப்பிப்பு என்பது வேறொன்னும் இல்லை. பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள். முகங்கள் மாறி இருக்கும். ஆனால் ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும். அதேபோல் கைரேகை மாறி இருந்தால், அவர்களால் ரேஷன் கடை, வங்கிகள் மற்றும் சிம்கார்டு வாங்கும் இடங்களில் சிக்கல் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் கூறுகிறது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியது.
Aadhaar Card Update
அதன்படி ஆதாரை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதிக்குள் இலவசமாக மேற்கொள்ளலாம். அதன் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதாரை புதுப்பித்துள்ளனர். ஆனால், ஆதார் கார்டை புதுப்பிக்க 14ம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி. எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Aadhaar
இதுகுறித்து அத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில்: ஆதார் கார்டினை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது மிகவும் நல்லது. அப்படி புதுப்பிக்காவிட்டாலும் கார்டு செயல்பாட்டில் தான் இருக்கும். பொதுமக்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், 14ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்பது முற்றிலும் வதந்தியே என கூறியுள்ளார். அதாவது, புதிய ஆதார் பதிவு செய்வது தவிர மற்ற அனைத்து ஆதார் சேவைக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Education Loan: மிஸ் பண்ணிடாதீங்க! மாணவர்கள் கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்! என்னென்ன சான்றிதழ் தேவை?
Aadhaar Free Service
அதன்படி ஆதாரில் புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு செய்வது, முகவரி மாற்றம் செய்வது, பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரி மாற்றம் செய்தால் அதற்கு வருகிற 14ம் தேதி வரை கட்டணம் கிடையாது. இதனை தவறாக புரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.