Using Aadhaar
ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்துவிட்டு செக்-இன் செய்யும்போதெல்லாம் ஆதார் கார்டு கேட்கப்படும். அப்போது 99.9 சதவீதம் பேர் தங்களது ஆதார் அட்டையின் அசல் நகலைக் கொடுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் உணரவில்லை.
Sharing Aadhaar card in hotels
ஆதார் அட்டை மூலம் தனிப்பட்ட தகவல்களை யார் வேண்டுமானாலும் திருடும் அபாயம் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கும் பாதிக்கப்படலாம். இதுபோன்ற ஆபத்துகள் அனைத்தையும் தவிர்க்க விரும்பினால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அசல் ஆதார் அட்டையையோ அதன் புகைப்பட நகலையோ ஹோட்டலில் கொடுக்கவே கூடாது. இதுபோன்ற இடங்களில் நீங்கள் எப்போதும் மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும்.
Aadhaar Safety
முதலில் மாஸ்க் ஆதார் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கைத் தொடங்குவது, கடன் பெறுவது, அரசுத் திட்டங்களில் பலன் பெற விண்ணப்பிப்பது போன்ற என பல இடங்களில் தகவல் சரிபார்ப்புக்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது. ஆதார் இவ்வளவு முக்கியமான ஆவணமாக இருப்பதால், அதில் உள்ள விவரங்களின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம். எனவே எந்தவிதமான மோசடிக்கும் பலியாகாமல் இருக்க ஆதார் தகவல்களை மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
Masked Aadhaar Card
மாஸ்க் ஆதார் கார்டு என்பது ஆதார் தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குகிறது. மாஸ்க் ஆதார் கார்டில் வழக்கமான ஆதார் அட்டையில் உள்ள சில விவரங்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் தெரியாது. கடைசி 4 இலக்கங்களை மட்டுமே பார்க்க முடியும். இது ஆதார் அட்டையைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அம்சம் ஆகும்.
UIDAI portal
மாஸ்க் ஆதார் அட்டையை https://uidai.gov.in/ என்ற ஆதார் ஆணையத்தின் (UIDAI) அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்யலாம். இந்த மாஸ்க் ஆதார் கார்டை எந்த ஹோட்டலிலும் முன்பதிவு செய்வும், செக் அவுட் செய்யும்போதும் பயன்படுத்தலாம். விமான நிலையத்திலும் இந்த மாஸ்க் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம். எனவே, ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்தப் பழகிக்கொள்வது நல்லது.