மாதம்தோறும் ரூ.20,000 தானா வரும்! உடனே இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!

First Published | Oct 20, 2024, 2:55 PM IST

ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 வருமானத்தைத் தரும் ஒரு போஸ்ட் ஆபிஸ் திட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதுவும் இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பணத்தை டெபாசிட் செய்தால் போதும். இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

Post Office Schemes

பல அரசாங்க திட்டங்கள் அஞ்சல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கணிசமான வருமானம் கொடுக்கும் இந்த போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாகவும் கருதப்படுகின்றன. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்தத் திட்டங்கள் அதிக லாபம் ஈட்டுவதுடன் பல்வேறு கூடுதல் பலன்களையும் வழங்குகின்றன.

Post Office Saving Scheme

ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வருமானத்தைத் தரும் ஒரு போஸ்ட் ஆபிஸ் திட்டத்தைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே பணத்தை முதலீடு செய்தால் போதும். அதன் பிறகு மாத வருமானமாகத் ஒரு தொகை தொடர்ந்து கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைத் தரும் திட்டமாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 எடுத்துக் கொள்ளலாம்.

Tap to resize

Post Office

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 சம்பாதிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 8.2 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் திருத்தப்படும். ஆனால், இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் கணக்கில் சேர்க்கப்படும். எந்த ஒரு அரசு திட்டத்திலும் வழங்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் இதுதான்.

Post Office Investment

இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. இது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Post Office SCSS

இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால் வட்டியாக ஆண்டுதோறும் 2,46,000 ரூபாய் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் 20,500 ரூபாய் மாத வருமானம் ஈட்டலாம். இத்திட்டம் 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் இருந்தபடியே நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

SCSS age limit and eligibility

இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய விரும்பினால், அருகிலுள்ள தபால் அலுவலகம் மற்றும் வங்கியை அணுகி கணக்கு தொடங்கலாம். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் SCSS திட்டத்தில் முதலீடு செய்து பலன் அடையலாம். 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாலும், இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

SCSS Tax Deduction

இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் அசல் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். ஆனால், இத்திட்டத்தில் ஈட்டப்படும் வட்டிக்கு வருமான வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படும்.

ஒரு நிதியாண்டில் ஈட்டும் வட்டி ரூ.50,000க்குக் குறைவாக இருந்தால் வருமான வரி பிடித்தம் செய்யப்படாது. இந்த வரம்புக்கு அதிகமான வட்டி கிடைத்தால் TDS பிடித்தம் செய்யப்படும். விருப்ப ஓய்வு பெற்று, 55 வயது முதல் 60 வயதுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.10,000 வரை வட்டியின் மீதான வரி விலக்கு பெறலாம். அதற்கு மேல் வட்டி வந்தால் TDS பிடித்தம் பொருந்தும்.

Latest Videos

click me!