Recurring Deposit rate hike in 2023: முதியோருக்கான 5 வருட ஆர்.டி.க்கு 10% வட்டி வழங்கும் வங்கி!

First Published May 22, 2023, 3:00 PM IST

வங்கிகளில் நிரந்தர வைப்புநிதி திட்டங்களிலும் தொடர் வைப்புநிதி திட்டங்களிலும் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் 10% வரை உயர்ந்துள்ளன. ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு முதல் ரெப்போ வட்டி விகித்ததை உயர்த்தி வருவதே இதற்குக் காரணமாக உள்ளது.

10 சதவீதம் வட்டி

மே 2023 இல், சூர்யோதய் சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank) மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு வைப்புநிதி திட்டங்கள் மீது 9.6% வட்டியை அறிவித்தது. இது கிட்டத்தட்ட 10% ஆகும். யூனிட்டி சிறு நிதி வங்கி (Unity Small Finance Bank) மூத்த குடிமக்களுக்கு 9.5% வட்டியை வழங்குகிறது. இந்த வங்கிகளில் பொது குடிமக்களுக்கான அதிகபட்ச வட்டிவிகிதமும் 9% ஆகும்.

சூர்யோதய் சிறு நிதி வங்கி (SSFB)

இந்த வங்கியில் 5 வருட தொடர் வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 9.6% வட்டி வழங்கப்படுகிறது. முதியோர் அல்லாத மற்றவர்களும் 9.1% வட்டி பெறலாம். மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளில் ரூ.3.85 லட்சம் ஈட்டலாம்.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Bank)

யூனிட்டி வங்கி மூத்த குடிமக்களுக்கு 1001 நாட்கள் முதலீட்டுக்கு 9.5% வட்டி வழங்குகிறது. 5 வருட டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு யூனிட்டி வங்கி 8.15% வட்டி வழங்குகிறது. மற்றவர்கள் 1001 நாட்களுக்கான டெபாசிட்டுகளுக்கு 9% வட்டியும், 5 வருட தொடர் வைப்புநிதி திட்டத்தில் 7.65% வட்டியும் பெறலாம். மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.3.7 லட்சம் கிடைக்கும்.

பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)

பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கு 5 வருட தொடர் வைப்புநிதி திட்டத்தில் 7.5% வட்டி வழங்குகிறது. மற்றவர்கள் 6.6% வட்டி பெறலாம். மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகள் முடிவில் ரூ.3.6 லட்சம் முதிர்வுத் தொகை பெறலாம்.

ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank)

ஹெச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 வருட தொடர் வைப்புநிதி திட்டத்தில் 7.5% வட்டி வழங்குகிறது. மற்றவர்கள் தொடர் வைப்புநிதி திட்டத்தில் 7% வட்டி பெறலாம். 5 ஆண்டுகளில் மூத்த குடிமக்களுக்கு சுமார் ரூ 3.6 லட்சம் முதிர்வுத்தகை கிடைக்கும். 10 ஆண்டுகள் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 0.25% கூடுதலாக 7.75% வட்டி கிடைக்கும்.

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)

ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு தொடர் வைப்புநிதி திட்டத்தில் 7.5% வட்டியை வழங்குகிறது. மற்றவர்கள் 5 வருட தொடர் வைப்புநிதி திட்டத்தில் 6.9% வட்டி பெறலாம். இந்த வங்கியில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் சுமார் 3.6 லட்சம் கிடைக்கும்.

click me!