திருட்டு போன நகைகளுக்கு மட்டுமல்ல, வெள்ளம், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களிலும் உங்கள் தங்க நகைகள் தொலைந்தால் இந்தக் காப்பீடு உதவும். ஆனால் இந்தக் காப்பீட்டு வசதி எல்லா நகைக்கடைகளிலும் கிடைக்காது. லலிதா ஜுவல்லரி, தனிஷ்க் போன்ற பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும். நகை வாங்குவதற்கு முன்பு கடையில் காப்பீட்டு வசதி உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். காப்பீட்டு வசதி அளிப்பது கடையின் சொந்த விருப்பம். எனவே சரிபார்த்துக் கொள்வது நல்லது.