Train Lower Berth: ரயிலில் லோயர் பெர்த் கன்பார்ம் ஆக வேண்டுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Published : Sep 12, 2026, 10:44 AM IST

Train Lower Berth: ரயிலில் டிக்கெட் புக் செய்யும்போது எல்லோருக்கும் குறிப்பாக வயதானவர்களுக்கு சில நேரங்களில் லோயர் பெர்த் கிடைப்பதில்லை. ரயிலில் லோயர் பெர்த் வாய்ப்பை அதிகரிக்கும் 5 வழிமுறைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
16
ரயிலில் லோயர் பெர்த் கன்ஃபார்ம்

ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் அனைவரும் அப்பர் பெர்த்தில் ஏறி இறங்குவதில் சிரமம் என்பதால் லோயர் பெர்த்களை விரும்புவார்கள். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக டிக்கெட் புக் செய்யும்போது, உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என நினைப்பீர்கள். ஆனால், டிக்கெட் வந்ததும் மிடில் அல்லது அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவீர்கள்.

இந்த வயதில் ஏறி இறங்குவது கடினம் என்பதால், பலரும் ரயில்வே நிர்வாகத்தைக் குறை சொல்வதுண்டு. ஆனால், ஒரு டிப்ஸ்களை பின்பற்றினால் ரயிலில் மூத்த குடிமக்கள் மட்டுமின்றி விரும்பியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும். அவை என்னெனன் டிப்ஸ் என விரிவாக பார்ப்போம்.

26
இந்த ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

சிலர் கவுண்ட்டரில் டிக்கெட் வாங்குவார்கள்; சிலர் ஆன்லைனில் முன்பதிவு செய்வார்கள். ஆனால், டிக்கெட் புக் செய்யும்போது, குறிப்பாக வயதானவர்கள் லோயர் பெர்த் தான் விரும்புவார்கள். ஆனால், அது எல்லாருக்கும் கிடைப்பது இல்லை. சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், லோயர் பெர்த் எளிமையாக வாங்கலாம்.

நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது, 'Choice of Berth' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், 'Lower Berth' விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த விருப்பத்தின் மூலம் கீழ் படுக்கை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

36
இப்படி செய்தால் லோயர் பெர்த் கன்பார்ம்

டிக்கெட் பதிவு செய்யும் போது, 'Book only if at least one lower berth is allotted' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விருப்பம் உங்களுக்குக் கீழடுக்கிகை (lower berth) கிடைக்க மட்டுமே உதவும். ஒருவேளை கீழடுக்கிகை இல்லையென்றால், உங்கள் டிக்கெட்டே முன்பதிவாகாது.

46
முன்கூட்டியே புக் செய்யவும்

உங்களுக்குக் கீழ் இருக்கை தேவையெனில், முன்னரே முன்பதிவு செய்யவும். பயணத் தேதிக்கு நூற்று இருபது நாட்களுக்கு முன்பாகவே இரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு செய்தால், கீழ் இருக்கை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். தாமதமாக முன்பதிவு செய்தால் வாய்ப்பு குறையும்.

56
சீனியர் சிட்டிசன் கோட்டா

உங்களுடன் வயதானவர்கள் யாராவது பயணம் செய்தால், சீனியர் சிட்டிசன் கோட்டாவைத் தேர்ந்தெடுங்கள். இது உங்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும். அதனால், இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.

66
TTE-யிடம் பேசுங்கள்

டிக்கெட் கன்ஃபார்ம் ஆகியும் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள். இரயிலில் ஏறியதும் TTE-யிடம் பேசுங்கள். ஏதாவது லோயர் பெர்த் காலியாக இருந்தாலோ, அல்லது வேறொரு பயணியுடன் இருக்கையை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தாலோ, TTE உங்களுக்கு உதவுவார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories