SCSS New Rules 2026: மூத்த குடிமக்களுக்கு 8.2% வட்டி வழங்கும் SCSS சேமிப்பு திட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 புதிய ரூல்ஸ் அமலுக்கு வந்துள்ளன. அது என்னென்ன விதிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
மூத்த குடிமக்கள் நலன் பயக்கும் வகையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அந்த வகையில் மத்திய அரசால் ஆதரிக்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), ஓய்வு பெற்றவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்கும் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக உள்ளது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். பழைய வரிமுறையின்கீழ் பிரிவு 80C-ன் படி ₹1.5 லட்சம் வரை இதற்கு வரிவிலக்கு உண்டு. இந்த திட்டத்தில் ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ள 5 முக்கியமான விதிகள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
24
1. ஓராண்டிற்குள் கணக்கை முடித்தால் வட்டி கிடையாது
முதலீட்டாளர் கணக்கைத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் அதை முன்கூட்டியே மூடினால், எந்த வட்டியும் வழங்கப்பட மாட்டாது. அதற்குள் ஏதேனும் வட்டிப் பணம் பெற்றிருந்தால், அது அசல் தொகையிலிருந்து வங்கியால் அல்லது தபால் நிலையத்தால் திரும்பப் பெறப்படும்.
2. முன்கூட்டியே கணக்கை முடித்தால் அபராதம்
கணக்கு தொடங்கி 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் பணத்தைத் திரும்பப் பெற்றால், அசல் தொகையிலிருந்து 1.5% அபராதமாகப் பிடிக்கப்படும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்தால், 1% தொகை அபராதமாகக் குறைக்கப்படும். மேலும், 5 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுத்தால் 80C வரிச் சலுகை ரத்தாகி, அந்தத் தொகை உங்களின் வரிக்குரிய வருமானத்துடன் சேர்க்கப்படும்.
34
3. கணவனுடன்/மனைவியுடன் மட்டுமே கூட்டுக் கணக்கு
இத்திட்டத்தில் தனி நபராவோ அல்லது கூட்டுக் கணக்காகவோ (Joint Account) முதலீடு செய்யலாம். ஆனால், கூட்டுக் கணக்கை தனது கணவன் அல்லது மனைவியுடன் மட்டுமே தொடங்க முடியும். கூட்டுக் கணக்கின் மொத்த முதலீடும் முதல் கணக்குதாரருக்கே சொந்தமானதாகக் கருதப்படும்.
4. டிடிஎஸ் (TDS) வரம்பு மற்றும் படிவம் 15H
மூத்த குடிமக்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.1 லட்சம் ஆகும். வட்டி வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் 10% டிடிஎஸ் (பான் கார்டு இல்லை எனில் 20%) பிடிக்கப்படும். மொத்த வருமானம் வரி வரம்பிற்குள் வராதவர்கள், டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்க தகுந்த படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாப்புப் படை வீரர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற்ற 1 மாதத்திற்குள் 50 வயதிலேயே இக்கணக்கைத் தொடங்கலாம்.
இத்திட்டத்தின் உச்சவரம்பான ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாகத் தவறுதலாக டெபாசிட் செய்யப்படும் உபரித் தொகை, முதலீட்டாளருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்படும். அந்த உபரித் தொகை திரும்பக் கிடைக்கும் வரையிலான காலத்திற்கு, தபால் நிலைய சாதாரண சேமிப்புக் கணக்கிற்கான வட்டி மட்டுமே வழங்கப்படும்; இத்திட்டத்தின் 8.2% வட்டி கிடைக்காது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.