ஸ்டேட் வங்கியில் ரூ.2,500 முதலீடு செய்தால் 8 லட்சம் ரூபாய் கிடைக்கும்!

First Published | Dec 2, 2024, 11:07 AM IST

குறைவான தொகையை டெபாசிட் செய்து பெரிய தொகையை சம்பாதிக்க எஸ்பிஐயின் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2500 முதலீடு செய்தால், ரூ.8 லட்சம் வருமானம் கிடைக்கும்.

SBI PPF Scheme

எஸ்பிஐயின் பிபிஎஃப் திட்டத்தில் (SBI PPF Scheme) வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு, புதிய வட்டி விகிதங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு வருமானத்தின் பலன் வழங்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தற்போது 2024-2025ஆம் ஆண்டுக்கான PPF திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது.

PPF Scheme

ஸ்டேட் வங்கியின் இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் முதலீட்டு செய்யலாம். ஆஃப்லைனில் அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குச் சென்று உங்கள் கணக்கைத் தொடங்கலாம்.

Tap to resize

Public Provident Fund

ஆன்லைனில் முதலீடு செய்ய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இணைய வங்கி அல்லது மொபைல் பேங்கிங் வசதியை நாடலாம். ஆன்லைனில் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய, நீங்கள் ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

PPF Investment

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 2500 முதலீடு செய்தால், வங்கியிலிருந்து முதிர்வு காலத்தில் ரூ. 8,13,642 கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் ரூ. 2500 முதலீடு செய்தால், ஒரு வருட முதலீடு 30000 ரூபாய். 15 வருட காலத்திற்கு இந்த முதலீட்டைத் தொடர்ந்தால் மொத்த டெபாசிட் தொகை ரூ. 4,50,000.

PPF scheme benefits

எஸ்பிஐ பொது வருங்கால வைப்புநிதி (PPF) திட்டத்தில் வலுவான வட்டி விகிதத்தின் பலனைப் பெறுவீர்கள். இத்திட்டத்தில் பெறும் முதிர்வுத் தொகையில் வட்டி மூலம் கிடைத்த வருவாய் ரூ.3,63,642. முதலீடு செய்த பணத்துடன் இதுவும் லாபமாகக் கிடைக்கும்.

ppf 4.jpg

உங்களுக்கு 18 வயது நிரம்பியிருந்தால், ஸ்டேட் வங்கி PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அவர்களுக்கு 18 வயது ஆகும்வரை சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தின் பலன் வழங்கப்படும். 18 வயதாகும்போது, ​​PPF திட்ட வட்டி விகிதங்களின் பலன் கிடைக்கும்.

Latest Videos

click me!