மீண்டும் குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.? துள்ளி குதிக்கும் மக்கள்

First Published | Dec 2, 2024, 9:45 AM IST

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நீண்ட காலத்தில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கிகளின் அதிகரித்த வாங்கும் ஆர்வம் மற்றும் பணவீக்கம் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

GOLD

ஏறி இறங்கும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி  தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலையானது இன்னும் அதிகரிக்கும் எனவும் அடுத்த சில வருடங்களிலேயே ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்தை தாண்டும் எனவும் ஒரு கிராம் தங்கம் 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்தனர்.

ஆனால் தங்கத்தின் விலையானது  அடுத்த சில நாட்களிலேயே சவரனுக்கு 4120 ரூபாய் வரை குறைந்தது. இதனால் நகைக்கடைகளில் நகைகளை வாங்க மக்கள் குவிந்தனர். 
 

gold rate

நகைக்கடைகளில் மக்கள் கூட்டம்

இருந்த போதும் தங்கத்தின் விலையானது எந்த நேரமும் மீண்டும் அதிகரிக்கும் என கூறப்பட்டது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் கடன் வாங்கியோ அல்லது பழைய நகைகளை அடகு வைத்தோ பொதுமக்கள் வாங்கி குவித்தனர். ஒரே நாளில் பல ஆயிரம் கிலோ கணக்கில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை உயர்ந்தது. மீண்டும் 57 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இருந்த போதும் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் செலுத்தினர்.

Tap to resize

gold price

தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்ன.?

தங்கத்தை வாங்கி வைப்பதன் மூலம் எதிர்கால சேமிப்பிற்கும், மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைக்கும் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டே அதிகளவு மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கும் ஆர்வம், உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் இதன் காரணமாக தங்கம் விலையானது அடுத்த சில ஆண்டுகளில் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கத்தை அதிகளவு வைத்திருப்பவர்கள் தான் வரும் காலங்களில் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

gold rate today

இன்றைய தங்கம் விலை என்ன.?

இந்தநிலையில் தங்கத்தின் விலையானது கடந்த சனிக்கிழமை சற்று குறைந்தது. அதன் படி ஒரு கிராம் 7150 ரூபாய்க்கும், ஒரு சவரன் 57ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தங்க வணிகம் விடுமுறையாகும். இன்று டிசம்பர் மாதத்தின் 2ஆம் தேதி தங்கத்தின் விலையானது  குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 60 ரூபாய் 7090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 56720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Latest Videos

click me!