பிக்ஸட் டெபாசிட்டில் கூடிக்கொண்டே போகும் வட்டி விகிதம்! இப்படி முதலீடு பண்ணுங்க!

First Published | Dec 2, 2024, 10:06 AM IST

Post Office FD Scheme: போஸ்ட் ஆஃபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டம் பாதுகாப்பானது மட்டுமல்ல, நல்ல வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. இதில், 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் 1-5 ஆண்டுகளில் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்பதைப் பார்க்கலாம்.

Post Office FD Scheme

இன்றைய காலகட்டத்தில், அனைவரும் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். போஸ்ட் ஆஃபீஸ் பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டம் அவர்களுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது. உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்புவோருக்கு போஸ்ட் ஆஃபீஸ் FD திட்டம் ஒரு சிறந்த வழி.

Post Office FD Scheme

போஸ்ட் ஆஃபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டம் பாதுகாப்பானது மட்டுமல்ல, நல்ல வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. இது முதலீட்டாளர்களுக்கு உறுதியான வருவாயை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Latest Videos


Post Office FD Scheme

போஸ்ட் ஆஃபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனும் எளிதாக முதலீடு செய்யக்கூடிய திட்டமாகும். 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை இதில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.

Post Office FD Scheme

போஸ்ட் ஆபிஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு வரிச் சலுகைகளையும் பெற முடியும். 5 ஆண்டுகளுக்கு FD கணக்கு தொடங்கி முதலீடு செய்தால் வரி விலக்கு கிடைக்கும். இது இத்திட்டத்தை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது.

Post Office FD Scheme

முதலீடு செய்யும் காலத்துக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களும் வழங்கப்படுகிறது. 1 வருடம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான முதலீட்டுக்கு வட்டி விகிதங்கள் மாறுபடும். அதன்படி, 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் 1-5 ஆண்டுகளில் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்பதைப் பார்க்கலாம்.

Post Office FD Scheme

1 லட்சத்தை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால், 6.9% வட்டி விகிதம் கிடைக்கும். இதன்படி, 1 வருடத்திற்குப் பிறகு நீங்கள் மொத்தம் ரூ. 1,07,081 பெறுவீர்கள். இதில் வட்டி ரூ. 7,081. ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில், 2 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 7%. 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 1,14,888 கிடைக்கும், இதில் வட்டி ரூ. 14,888.

Post Office FD Scheme

3 வருடங்களுக்கு ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் 7.1% வட்டி கிடைக்கும். 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,22,022 கிடைக்கும். இதில் வட்டி வடிவில் ரூ. 22,022 சேர்ந்திருக்கும். 5 ஆண்டுகளுக்கான ஒரு லட்ச ரூபாய் போஸ்ட் ஆபிஸ் பிக்சட் டெபாசிட்டில் 7.5% வட்டி விகிதம் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 44,995 வட்டி சேர்த்து, மொத்தம் ரூ. 1,44,995 பெறலாம்.

click me!