ரூ.10 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கி; யாருக்கெல்லாம் கிடைக்கும்?

First Published Oct 13, 2024, 12:51 PM IST

ஸ்டேட் வங்கியின் பசுபாலன் யோஜனாவின் கீழ், கால்நடை வளர்ப்புக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். பசு மற்றும் எருமை மாடுகளை வளர்ப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.

SBI Pashupalan Yojana 2024

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அவ்வகையில் ஸ்டேட் வங்கியின் பசுபாலன் யோஜனாவின் கீழ், கால்நடை வளர்ப்புக்கு கடன் உதவி கிடைக்கிறது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம்.

SBI Loan

இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவொரு இந்தியரும் கடன் கோரி விண்ணப்பிக்கலாம். சில அடிப்படையான விதிகளை மட்டும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதுவரை இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கடன் பெற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.

Latest Videos


SBI Loan for cattle

எஸ்.பி.ஐ. வங்கி மூலம் கால்நடை வளர்ப்பு கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எஸ்.பி.ஐ. பசுக்களுக்கு ரூ.60,000, எருமைகளுக்கு ரூ.70,000 கடன் வழங்குகிறது.

SBI Pashupalan Loan

விண்ணப்பிப்பவர் தன்னிடம் உள்ள அனைத்து விலங்குகளின் எண்ணிக்கையையும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். கால்நடை வளர்ப்பிற்கான ஆவணங்களும் இருக்க வேண்டும். எந்த வங்கியிலும் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவராக இருக்கக்கூடாது.

Pashupalan Yojana

பசுபாலன் யோஜனா மூலம் கிடைக்கும் கடனை கால்நடை வளர்ப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமான விதிமுறை ஆகும். தவறினால் கடன் தொகையைத் திருப்பித் தர வேண்டியிருக்கும்.

State Bank of India Loans

அருகிலுள்ள உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குச் சென்று எஸ்பிஐ பசுபாலன் யோஜனாவின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வங்கியில் தரப்படும் பசுபாலன் கடன் படிவத்தைப் பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். படிவம் மற்றும் ஆவணங்கள் வங்கியால் சரிபார்க்கப்பட்டு, நிலம் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையையும் சரிபார்த்த பிறகு கடன் தொகையை கிடைக்கும்.

click me!