Published : Apr 01, 2025, 03:58 PM ISTUpdated : Apr 01, 2025, 04:28 PM IST
ஸ்டேட் வங்கியின் மொபைல் பேங்கிங், ஏடிஎம் சேவைகள் முடங்கியுள்ளன. வருடாந்திர கணக்கு முடிப்பு காரணமாக டிஜிட்டல் சேவைகள் கிடைக்காது என எஸ்பிஐ அறிவித்துள்ளது. பிற வங்கி சேவைகளும் பாதிக்கப்படலாம் என என்.பி.சி.ஐ தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியின் வங்கி சேவைகள் முடங்கி இருக்கின்றன. மொபைல் பேங்கிங், ஏடிஎம்மில் பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக எஸ்பிஐ பயனர்கள் புகார் கூறுகின்றனர்.
வலைத்தளங்களின் செயல்திறனைக் கண்காணிக்கும் தளமான டவுன்டிடெக்டரின் (Downdetector.com) கூற்றுப்படி, இன்று காலை 8:15 மணியளவில் இந்த செயலிழப்பு தொடங்கியது. 11:45 மணியளவில் 800 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
24
SBI outage
புகார்களில் சுமார் 64% மொபைல் பேங்கிங் தொடர்பானவை. 33% நிதி பரிமாற்றம் தொடர்பானவை, 3% ஏடிஎம் சிக்கல்கள் தொடர்பானவை. வங்கி சேவையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.
“வருடாந்திர கணக்கை முடிக்கும் நடவடிக்கைகள் காரணமாக, எங்கள் டிஜிட்டல் சேவைகள் 01.04.2025 அன்று மதியம் 01:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கிடைக்காது. தடையற்ற சேவைகளுக்கு UPI லைட் மற்றும் ஏடிஎம்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
44
SBI Yono fund transfer issues
இந்திய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (NPCI) சில வங்கி சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. "இன்று நிதியாண்டு நிறைவடைவதால், சில வங்கிகள் அவ்வப்போது பரிவர்த்தனை சரிவைச் சந்தித்து வருகின்றன. UPI அமைப்பு நன்றாக வேலை செய்கிறது, மேலும் தேவையான தீர்வுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என்று NPCI இன் பதிவு கூறுகிறது.