PF ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்கிறது! EPFO சூப்பர் திட்டம்!

EPFO ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் கோரிக்கைகள் விரைவாகவும், எளிதாகவும் தீர்க்கப்படும். மேலும், பயனாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO Update

வருங்கால வைப்பு நிதி:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களுக்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிர்வாகக் குழுவால் இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மத்திய அறங்காவலர் குழுவிலிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும். அதற்குப் பின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO New Scheme

அட்வான்ஸ் கிளெய்ம் வரம்பு:

கடந்த மே 2024 இல், ​​முன்கூட்டியே PF தொகையை எடுக்கக் கோரும் அட்வான்ஸ் கிளெய்ம்களுக்கான ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பை ரூ.50,000 இலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவது / கட்டுவது ஆகிய நான்கு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தொகையை எடுத்துக்கொள்ள ஆட்டோ செட்டில்மென்ட் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்! சம்பளம் கிடுகிடுன்னு எகிறப்போகுது! அகவிலைப்படி உயர்வு


EPFO claim settlement

எளிமையான செயல்முறை:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமீபத்தில் ஆட்டோ செட்டில்மென்ட் செயல்முறையை எளிமைப்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக பெரும்பாலான கோரிக்கைகள் மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படுகின்றன. முன்பு இதற்கு சில வாரங்கள்கூட ஆகும் நிலை இருந்தது.

Auto-settlement limit for PF claim

ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பு:

தற்போது, EPFO ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பு உயர்த்தப்படுவதால், கோரிக்கைள் தீர்க்கப்படும் எண்ணிக்கை முதல் முறையாக 6 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோ செட்டில்மென்ட் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 90 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 கோடியாக உயர்த்துள்ளது. அதாவது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

EPFO members

PF கோரிக்கைகளின் எண்ணிக்கை:

இப்போது, கோரிக்கைகளில் 8% க்கு மட்டுமே உறுப்பினர் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தின் சான்றளிப்பு தேவைப்படுகிறது. 48% கோரிக்கைகள் உறுப்பினர்களால் நேரடியாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன. 44% தானாகவே செயலாக்கப்படுகின்றன. EPFO ​​ஏற்கனவே செயல்முறைகளின் எண்ணிக்கையை 27 இல் இருந்து 18 ஆகக் குறைத்துள்ளது. அதை 6 ஆகக் குறைக்கவும் திட்டம் வகுத்து வருகிறது.

Latest Videos

click me!