Published : Jan 07, 2025, 08:20 PM ISTUpdated : Jan 07, 2025, 09:18 PM IST
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஹர் கர் லக்பதி என்ற புதிய ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடர் வைப்புநிதித் திட்டம் (RD) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து 1 லட்சம் ரூபாயைச் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ ஹர் கர் லக்பதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யலாம். நீங்கள் கணக்கைத் திறக்கும்போது, மாதாந்திர தவணைத் தொகையையும் முதலீட்டுக் காலத்தையும் நீங்களே தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கிடைக்கும்.
25
SBI Har Ghar Lakhpati scheme
ஹர் கர் லக்பதி திட்டம், சேமிப்பு செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், வாடிக்கையாளர்களை திறம்பட திட்டமிடவும், சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கவும் உதவுகிறது. இந்தத் திட்டம் பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறார்களுக்கும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
35
SBI New Recurring Deposit Scheme
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 12 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 120 மாதங்கள் (10 ஆண்டுகள்) வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலான டெபாசிட்களுக்கு வாடிக்கையாளர்கள் 6.80% வட்டியைப் பெற முடியும். இரண்டு வருடங்களுக்கும் மேலாக டெபாசிட் செய்தால் 7% ஆக அதிகரிக்கும். இதற்கு மேல், முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து 6.75% முதல் 6.5% வரை வட்டி விகிதங்கள் மாறுபடும்.
45
SBI Har Ghar Lakhpati Scheme Benefits
பொது வாடிக்கையாளர்கள் 6.75% வட்டி விகிதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 2,500 முதலீடு செய்தால், முதலீட்டுக் காலத்தின் முடிவில் ரூ 1 லட்சத்தைப் பெறலாம். மாறாக, அதே வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,810 முதலீடு செய்தால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்சத்தை அடையலாம். 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,407 முதலீடு செய்தால், 6.50% வட்டி விகிதத்தில் ஒரு லட்சம் ரூபாயை ஈட்டலாம்.
55
SBI Har Ghar Lakhpati RD scheme interest rate
மூத்த குடிமக்கள் 7.25% வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,480 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தைப் பெறலாம். இதே வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.1,791 வீதம் 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தாலும் ஒரு லட்சம் ரூபாயைப் பெறலாம். 3 ஆண்டுகளுக்கு 7% வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் 1,389 ரூபாய் முதலீடு செய்தால், ரூ.1 லட்சத்தைப் பெறலாம்.