அதிக வட்டியுடன் எஸ்பிஐ வழங்கும் சூப்பர் சீனியர் பிக்சட் டெபாசிட் திட்டம்!

First Published | Jan 7, 2025, 7:08 PM IST

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்காக 'எஸ்பிஐ பேட்ரன்ஸ்' (SBI Patrons) என்ற புதிய டெபாசிட் திட்டத்தை ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் அதிக வட்டி விகிதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

SBI Patrons Scheme for Senior Citizens

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு டெபாசிட் சந்தையில் எஸ்பிஐக்கு சுமார் 23% பங்கு உள்ளது. இந்நிலையில், எஸ்பிஐ சமீபத்தில் இரண்டு புதிய டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

SBI Patrons Fixed Deposit Scheme

'ஹர் கர் லக்பதி', 'எஸ்பிஐ பேட்ரன்ஸ்' என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டங்கள் முன்பை விட வாடிக்கையாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் சிறந்த பலன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

Tap to resize

SBI Patrons Scheme Interest Rate

'எஸ்பிஐ பேட்ரன்ஸ்' திட்டம் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கானது. அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம். இதில் தற்போதைய பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மூத்த குடிமக்களுக்குக் கிடைக்கும் வட்டி விகிதங்களை விட அதிகமான பலனைப் பெறலாம்.

SBI Patrons Scheme Benefits

எஸ்பிஐ பேட்ரன்ஸ் திட்டத்தின் கீழ், சூப்பர் சீனியர்கள் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட்டுக்குக் கிடைக்கும் வட்டிவிகிதத்தைவிட 10 அடிப்படை புள்ளிகள் (BPS) கூடுதல் வட்டியைப் பெறுவார்கள். முன்கூட்டியே திரும்பப் பெறவதும் அனுமதிக்கப்படும். ஆனால், அதற்கான பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

SBI Patrons Scheme Eligibility

80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து இந்தியர்களும் இதில் கணக்கு தொடங்கலாம். SBI ஊழியர்களும் இத்திட்டத்தில் சேர அனுமதி உண்டு. கூட்டுக் கணக்காக இருந்தால், முதன்மை கணக்குதாரர் 80 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

SBI Patrons Benefits

இத்திட்டத்தில் தற்போது உள்ள டெர்ம் டெபாசிட் வாடிக்கையாளர்களும் பலன் பெறுவார்கள். இந்த நன்மை சில்லறை டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டுமே. அதாவது, ரூ. 3 கோடிக்கும் குறைவான தொகையை மட்டும் இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்ய வேண்டும்.

SBI New FD Scheme for Senior Citizens

இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 10 ஆண்டுகள். கணக்கு தொடங்கி குறைந்தபட்சம் 7 நாட்கள் கழித்து முன்கூட்டியே முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

Latest Videos

click me!