ரூ.25,000-க்கு மேல்.. புதிய கட்டணங்களை அறிவித்த எஸ்பிஐ.. உடனே நோட் பண்ணுங்க

Published : Jan 25, 2026, 08:21 AM IST

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) விதிகளில் மாற்றம் செய்துள்ளது. பிப்ரவரி 15, 2026 முதல், இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பான விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். 

PREV
15
எஸ்பிஐ புதிய கட்டணம்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது IMPS (Instant Money Payment Service) ஆன்லைன் பணமாற்று விதிகளில் முக்கிய மாற்றங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் 2026 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும். இதுவரை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இணைய வங்கி, மொபைல் வங்கி, YONO ஆப் மூலம் ரூ.5 லட்சம் வரை IMPS வழியாக இலவசமாக பணம் அனுப்பப்பட்டது. ஆனால் இனி அதில் மாற்றம் ஏற்பட்டது.

25
பிப்ரவரி 15 முதல் விதிகள்

புதிய விதிப்படி, எஸ்பிஐ ஆன்லைன் வழியாக ரூ.25,000 வரை IMPS மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் இல்லை. ஆனால் ரூ.25,000-க்கு மேல் ஒரு ரூபாய் கூட பணம் அனுப்பினால், அந்த பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் விதிக்கப்படும். இதனால் பெரிய தொகைகளை டிரான்ஸ்ஃபர் செய்யும் பயனாளர்கள், இனி ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் செலவு கணக்கில் வைத்தே செய்ய வேண்டிய நிலை வரும்.

35
ரூ.25,000 மேல் IMPS கட்டணம்

IMPS ஆன்லைன் பணமாற்று புதிய கட்டணங்கள் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பினால் ரூ.2 + ஜிஎஸ்டி, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அனுப்பினால் ரூ.6 + ஜிஎஸ்டி, மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலித்தால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் + ஜி.எஸ்.டி. முக்கியமாக, இந்த கட்டணம் ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கும் தனித்தனியாக பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

45
ஆன்லைன் பணமாற்று புதிய கட்டணங்கள்

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த மாற்றம் ஆன்லைன் IMPS பரிவர்த்தனைக்கு மட்டுமே பொருந்தும். எஸ்பிஐ கிளை மூலம் நேரடியாக IMPS பணமாற்று செய்தால், அதற்கான கட்டணங்களில் புதிய மாற்றம் இல்லை. கிளை வழி IMPS கட்டணம் ஏற்கனவே இருந்த ரூ.2 முதல் ரூ.20 + GST என்ற பழைய கட்டணப்பட்டியலின்படியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகளுக்கு கட்டண விலக்கு

மேலும் சில குறிப்பிட்ட சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகளுக்கு எஸ்பிஐ இந்த கட்டணத்தில் விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது. DSP, PMSP, ICSP, CGSP, PSP, RSP, Shaurya Family Pension, எஸ்பிஐ Rishtey Family Savings Account போன்ற கணக்குகளில் இருப்பவர்களுக்கு இலவச IMPS வசதி தொடரலாம். அதே நேரத்தில் IMPS-க்கு தினசரி ரூ.5 லட்சம் எந்த வரம்பில் மாற்றமில்லை. குறிப்பாக வர்த்தகர்கள், தனிப்பட்டோர், சிறு வணிக உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள் போன்றோர் அடிக்கடி பெரிய தொகை அனுப்புவோருக்கு மாதச் செலவை சிறிது அதிகரிக்கும். ஆனால் ரூ.25,000-க்கு கீழ் அரிதாக அனுப்புபவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories