தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம், வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக எதிர்பாராத வகையில் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்ப்போம்.
24
நேற்று குறைந்த தங்கம் விலை
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சவரனுக்கு ரூ.3600 உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை உயர்ந்த தங்கம் மாலை நேரத்தில் அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும் விற்பனை செய்யப்பட்டது.
34
இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 24) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,949ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.127,592ஆக விற்பனையாகிறது.
தங்கத்துடன் வெள்ளியும் போட்டு போட்டுக்கொண்டு உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு 10 உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.355,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வெள்ளி நகை வாங்குவோர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.