SBI வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு! எஸ்பிஐ ஏடிஎம் கார்டு கட்டணம் உயர்வு; எந்தெந்த கார்டுக்கு எவ்வளவு?

First Published | Jan 23, 2025, 10:59 AM IST

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டுகளுக்கான பரமரிப்பு கட்டணம் உயர்ந்துள்ளது. எந்தெந்த வகை ஏடிஎம் கார்டுகளுக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பதை பார்க்கலாம்.

State Bank Of India

எஸ்பிஐ வங்கி 

இந்தியாவில் வங்கி சேவைகள் இப்போது அத்தியாவசியமாக உள்ளது. நாட்டில் ஏராளமான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலையில், எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இதில் முதன்மையானதாக உள்ளது. நாடு முழுவதும் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள எஸ்பிஐ மக்களுக்கு தடையற்ற சேவையை வழங்கி வருகிறது. 

மற்ற வங்கிகளை போலவே எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கும் ATM கார்டுகள் எனப்படும் டெபிட் கார்டுகளை வழங்கி வருகிறது. எஸ்பிஐ பிளாட்டினம் ஏடிஎம் கார்டு, பிசினஸ் ஏடிஎம் கார்டு, சில்வர் மற்றும் குளோபல் ஏடிஎம் கார்டுகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும், ஷாப்பிங் செய்வதற்கு ஆன்லைனில் பணம் செலுத்தவும் ஏடிஎம் கார்டுகள் உதவுகின்றன. 

SBI ATM Cards

பராமரிப்பு கட்டணம் 

இந்த டெபிட் கார்டுகளுக்கு ஆண்டுதோறும் எஸ்பிஐ சேவை கட்டணம் வசூலித்து வருகிறது. இதற்கான தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் திருத்தியுள்ளது அந்த வங்கியின் வலைத்தளம் மூலம் தெரியவருகிறது. 

பொதுவான எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி,  ரூ.200 + ஜிஎஸ்டி ஆக அதிகரித்துள்ளது. இந்த கார்டுகளை பொறுத்தவரை ரூ.200 பராமரிப்பு கட்டணம். 18% ஜிஎஸ்டி அதவாது ரூ.36ஐயும் சேர்த்தால் மொத்தமாக ரூ.236 உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து கழிக்கப்படும்.

பிள்ளைகள் கல்யாணத்துக்கு பிஎஃப்பில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?
 


ATM Service Fee

பிளாட்டினம், பிஸ்னஸ் கார்டுகள் 

யுவா, கோல்ட், காம்போ மற்றும் மை கார்டு (இமேஜ் கார்டு) போன்ற எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.175 + ஜிஎஸ்டியில் இருந்து ரூ.250 + ஜிஎஸ்டி ஆக உயர்ந்துள்ளது. இந்த கார்டுகளை பொறுத்தவரை ரூ.250 பராமரிப்பு கட்டணம். 18% ஜிஎஸ்டி அதவாது ரூ.45 ஐயும் சேர்த்தால் மொத்தமாக ரூ.295 அக்கவுண்ட்டில் இருந்து கழிக்கப்படும்.

பிளாட்டினம் ஏடிஎம் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ. 250 + ஜிஎஸ்டியில் இருந்து ரூ.325 + ஜிஎஸ்டி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.325 பராமரிப்பு கட்டணம். 18% ஜிஎஸ்டி அதவாது ரூ.58.5 ஐயும் சேர்த்தால் மொத்தமாக ரூ.383.5 அக்கவுண்ட்டில் இருந்து கழிக்கப்படும். பிரைட் பிரீமியம் பிசினஸ் போன்ற ஏடிஎம் கார்டுகளுக்கு, வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் ரூ.350 + ஜிஎஸ்டியில் இருந்து ரூ.425 + ஜிஎஸ்டி ஆக அதிகரித்துள்ளது. 

SBI Bank

ஏடிஎம் கார்டு மாற்ற கட்டணம் 

இதேபோல் பிளாட்டினம் பிசினஸ் ரூபே ஏடிஎம் கார்டுகளுக்கு ரூ.350 + ஜிஎஸ்டி பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஸ்பி ஏடிம் கார்டுகளில் ரிவார்ட்ஸ் புள்ளிகள், இலவச விமான நிலைய லான்ச் அணுகல், சர்வதேச பரிவர்த்தனைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. பராமரிப்பு கட்டணம் மட்டுமின்றி ஏடிஎம் கார்டு மாற்றுதலுக்கு ரூ.300 + ஜிஎஸ்டி, நகல் பின்/மீளுருவாக்கத்திற்கு ரூ.50 + ஜிஎஸ்டி ஆகிய கட்டணங்களை எஸ்பிஐ வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை வங்கிகளில் ஈஸியாக கடன் வாங்கலாம்; மத்திய அரசு அளிக்கும் 'மெகா' பரிசு!

Latest Videos

click me!