Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பணம் வைக்கலாம்? இந்த தப்பெல்லாம் செஞ்சா சிக்கல்தான்!

Published : May 24, 2026, 07:57 PM IST

Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பண்ம் வைத்திருக்கலாம்? எவ்வளவு பணத்துக்கு மேல் வரி பிடிக்கப்படும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
13
சேவிங்ஸ் அக்கவுன்ட் ரூல்ஸ்

பொதுவாக, சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் பணம் வைக்க குறிப்பிட்ட உச்சவரம்பு எதுவும் கிடையாது. உங்கள் வருமானத்துக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் கணக்கில் இருக்கும் பணம், நீங்கள் அறிவித்த வருமானத்துடன் பொருந்த வேண்டும். இல்லை என்றால், வங்கி அல்லது வருமான வரித்துறை விளக்கம் கேட்க வாய்ப்புள்ளது.

வங்கி விதிகளின்படி, ஒரே தடவையாக ₹50,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், பான் கார்டு விவரங்களைக் கொடுப்பது கட்டாயம். பான் கார்டு இல்லையென்றால், ஃபார்ம் 60 அல்லது ஃபார்ம் 61 சமர்ப்பிக்க வேண்டும். சில வங்கிகள் தினசரி ரொக்க டெபாசிட்டுக்கு ஒரு வரம்பை வைத்துள்ளன. சில வங்கிகளில் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை டெபாசிட் செய்ய அனுமதி உண்டு. இந்த வரம்பு வங்கி மற்றும் கணக்கு வகையைப் பொறுத்து மாறும்.

23
எப்போது வரி விதிப்பார்கள்?

வருமான வரி விதிகளின்படி, ஒரு நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) உங்கள் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் மொத்தம் ₹10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் ஆனால், அந்த விவரத்தை வங்கி வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கும். இந்த விதி ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆன்லைன் பரிமாற்றங்கள் அல்லது காசோலைகள் மூலம் வரும் பணத்திற்கு இது பொருந்தாது.

உங்கள் கணக்கில் ₹10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் ஆன உடனேயே வரி விதிப்பார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், அந்தப் பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வாய்ப்புள்ளது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கு நீங்கள் முறையான ஆவணங்களைக் காட்டினால், எந்தப் பிரச்சினையும் வராது.

33
50,000-க்கு மேல் பான் கட்டாயம்

சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் பெரிய தொகையை டெபாசிட் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ₹50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம். பணத்திற்கான சரியான ஆதாரங்களை வைத்துக்கொள்ளுங்கள். வருமான வரி ரிட்டர்னில் வருமானத்தைச் சரியாகக் காட்டுங்கள். சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விதிகளைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் வராது.

வட்டி வருமானத்திற்கான வரி

₹10,000 வரம்பு: உங்கள் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்திற்கு வங்கி வட்டி வழங்கும். ஒரு நிதியாண்டில் இந்த வட்டி வருமானம் ₹10,000 தாண்டினால், அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும் (வருமான வரிச் சட்டம் பிரிவு 80TTA-இன் படி ₹10,000 வரை விலக்கு உண்டு). மூத்த குடிமக்கள் (Senior Citizens): இவர்களுக்கு பிரிவு 80TTB-இன் கீழ் சேவிங்ஸ் மற்றும் பிக்ஸட் டெபாசிட் (FD) இரண்டையும் சேர்த்து ₹50,000 வரை வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு.

பல கணக்குகள் வைத்திருப்பவர்கள்

ஒரு நபர் ஒரே வங்கியில் அல்லது வெவ்வேறு வங்கிகளில் பல சேவிங்ஸ் கணக்குகள் வைத்திருந்து, எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தமாக ரொக்க டெபாசிட் ₹10 லட்சத்தைத் தாண்டினாலும், பான் கார்டு (PAN) எண் ஒன்றாக இருப்பதால் வருமான வரித்துறைக்கு அந்தத் தகவல் தானாகவே சென்றுவிடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories