Money: வரலாற்றில் முதன் முறையாக தரை மட்டத்திற்கு வீழ்ந்த இந்திய ரூபாய் மதிப்பு! காரணம் இதுதான்!

Published : Dec 03, 2025, 12:35 PM IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் முதல்முறையாக ரூ.90.15 என்ற புதிய சரிவை சந்தித்துள்ளது. தாமதமாகும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்,வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை ஆகியவையே வீழ்ச்சிக்கு காரணங்களாகும். 

PREV
12
டாலர் மதிப்பு உச்சம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக ரூ.90.15 என்ற புதிய குறைந்த நிலையை எட்டியுள்ளது. இதுவரை ரூபாய் சந்தித்த பெரும் சரிவுகளில் இதுவே மிகக் கடுமையானதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

காரணம் இதுதான்

இந்தியா – அமெரிக்கா இடையேயான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல் நீண்ட பேச்சுவார்த்தையில் தாமதமடைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ரூபாய் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மை, அதன் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. அதேசமயம், உலக சந்தைகள் பெரும் அதிர்வுகளை சந்தித்து வருவது, முக்கிய நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக டாலர் வலுவாக உயர்வதும் ரூபாய் மதிப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

22
பொருளாதார காரணம் இதுதான்.!

இதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வதும், அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி ஆரம்பத்தில் வழங்க வேண்டிய ஆதரவை வழங்காததும், டாலருக்கான தேவை திடீரென அதிகரித்ததும் ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நேற்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு முதன்முறையாக ரூ.90-ஐ எட்டியது. பின்னர் சற்று இலகுவாகி ரூ.89.95 ஆக இருந்தாலும், இன்று காலை மீண்டும் சரிந்து ரூ.90.15 என்ற வரலாற்றிலேயே குறைந்த மதிப்பைத் தொட்டுள்ளது. இந்த நிலையில், “ரூபாய் எது வரை சரியும்?” என்ற அச்சம் சந்தைகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories