டிசம்பர் 3: இன்று வங்கி விடுமுறை: எந்த மாநிலங்களில்? முழு விபரம் இதோ

Published : Dec 03, 2025, 09:40 AM IST

டிசம்பர் மாதத்தில், வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறைகள் உட்பட மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. உங்கள் வங்கிப் பணிகளைத் திட்டமிட, இந்த விடுமுறைப் பட்டியலை முன்கூட்டியே அறிவது அவசியம்.

PREV
12
வங்கி விடுமுறை

டிசம்பர் மாதம் தொடங்கியதால் பல மாநிலங்களில் வங்கி விடுமுறைகள் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, இந்த மாதத்தில் மொத்தம் 12 நாள் அரசு விடுமுறை உள்ளது. அதற்கு கூடுதலாக ஞாயிறு மற்றும் இருபத்தி நாள் வார இறுதி காரணமாக 6 நாள் விடுமுறை. இதனால் 31 நாளில் 18 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.

இன்று டிசம்பர் 3 (புதன்கிழமை) வங்கி விடுமுறை எங்கெல்லாம் என்பதை விரிவாக பார்க்கலாம். கோவாவில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பிரபல மிஷனரி செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் நினைவு நாள். கோவாவில் இந்த நாளில் சிறப்பு பிரார்த்தனைகள், ஊர்வலங்கள், மத நிகழ்ச்சிகள் நடப்பதால் வங்கிகள் மூடப்படுகின்றன.

டிசம்பர் 2025ல் எப்போது எங்கு வங்கிகள் மூடப்படும்?

டிசம்பர் 1 (திங்கட்கிழமை)

- மாநில அருணாசலப் பிரதேசம் – தினம்

- நாகாலாந்து – பழங்குடி நம்பிக்கை தினம்

டிசம்பர் 3 (புதன்கிழமை)

- கோவா – செயிண்ட் சேவியர் நினைவு நாள்

டிசம்பர் 12 (வெள்ளிக்கிழமை)

- மேகாலயா – Pa Togan Nengminja Sangma வீர மரண நாள்

டிசம்பர் 18 (வியாழக்கிழமை)

- மேகாலயா – கவிஞர் U Soso Tham நினைவு நாள்

டிசம்பர் 19 (வெள்ளிக்கிழமை)

- கோவா – மாநில விடுதலை நாள்

22
டிசம்பர் விடுமுறைகள்

டிசம்பர் 20 & 22 (சனி & திங்கள்)

- சிக்கிம் – Losung/Namsung திருவிழா

டிசம்பர் 21 (ஞாயிறு)

- வழக்கமான ஞாயிறு விடுமுறை

டிசம்பர் 24 (புதன்கிழமை)

- நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் – கிறிஸ்துமஸ் ஈவு

டிசம்பர் 25 (வியாழக்கிழமை)

- கிறிஸ்துமஸ் – நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

டிசம்பர் 26 (வெள்ளிக்கிழமை)

- கிறிஸ்துமஸ்க்கு பின் 3 வடகிழக்கு மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்

டிசம்பர் 30 (செவ்வாய்)

-மேகாலயா – சுதந்திர போராட்ட வீரர் U Kyang Nangbah நினைவு நாள்

டிசம்பர் 31 (புதன்கிழமை)

- மிசோரம் & மணிப்பூர் – புத்தாண்டு முன்னேர் மற்றும் இமோயினு இரட்பா திருவிழா

டிசம்பர் மாத பல மாநிலங்களில் திருவிழா, வரலாற்று நாள் மற்றும் மத நிகழ்வுகள் காரணமாக வங்கிகள் மூடப்படுகின்றன. உங்கள் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க வங்கி விடுமுறை தேதிகளை முன்கூட்டியே கவனியுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories