3 பக்கெட் பிளான் என்றால் என்ன? அதிக பென்ஷன் கிடைக்க இந்த ஐடியாவை யூஸ் பண்ணிக்கோங்க!

First Published | May 7, 2024, 1:22 PM IST

அதிக பென்ஷன் கொடுக்கும் 3 பக்கெட் பிளான் என்றால் என்ன? இந்தத் திட்டம் ஓய்வூதிய பாதுகாப்பை வழங்க எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

Retirement planning

பணி ஓய்வு பெற்ற பின் எதிர்காலத்திற்கான நிலையான வருமானத்தை உறுதியை செய்ய 3 பக்கெட் பிளான் என்ற புத்திசாலித்தனமான திட்டத்தை பயன்படுத்தலாம். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.

What is the 3 bucket strategy?

வெவ்வேறு காலகட்டங்களில் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய மூன்று தனித்தனி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதுதான் 3-பக்கெட் பிளான் எனப்படுகிறது. ஒவ்வொரு முதலீடும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் முதுமையில் மாதாந்திர செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்த உத்தி 1980களில் அமெரிக்க நிதி ஆலோசகரான ஹரோல்ட் ஈவன்ஸ்கியால் முதலில் பரிந்துரைக்கப்பட்டது.

Tap to resize

Liquidity bucket

அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் வரக்கூடிய உடனடி மற்றும் குறுகிய காலப் பணத்தேவைக்கு கவனம் செலுத்துகிறது. இதில் அவசரத் தேவைக்கான நிதி, வழக்கமான மாதாந்திர செலவுகள், சுகாதாரச் செலவுகள் போன்றவை அடங்கும். மாத ஓய்வூதியம் அல்லது பிற வழக்கமான வருமானத்தைப் பெறுபவராக இருந்தால், அதில் ஒரு தொகையை ஈக்விட்டிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

Safety bucket

அடுத்த 2-3 ஆண்டுகளுக்குரிய உடனடி பணத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டமிடலில் கவனம் செலுத்தலாம். இந்த முதலீட்டில் செலுத்தும் பணம் பணவீக்கத்திற்கு ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டும். பணப்புழக்கம் மற்றும் வருமானத்திற்கு இடையே சமநிலையை பராமரிப்பதில் கவனம் தேவை. எனவே, பிக்ஸட் டெபாசிட், நடுத்தர கால கடன் நிதிகள், கார்ப்பரேட் பத்திர நிதிகள்,  5 ஆண்டுகள் வரையிலான அரசு சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

Wealth creation bucket

நீண்ட காலத்திற்கு பணத்தேவைக்கு வேண்டிய அதிக வருமானத்தை உருவாக்கும் முதலீடுகளில் கவனிக்க வேண்டும். இது அடுத்த 8 ஆண்டுகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது. ஈக்விட்டி ஃபண்டுகள், ஸ்மார்ட்-பீட்டா நிதிகள், தங்கம் போன்ற முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

Latest Videos

click me!