ஏடிஎம் கார்டு இல்லாமல் UPI பரிவர்த்தனையைத் தொடங்குவது எப்படி?
1. உங்களுக்கு விருப்பமான UPI அப்ளிகேஷனை ட்வுன்லோட் செய்துகொள்ளவும். அதில் 'UPI ஐடியைச் சேர்' (Add UPI ID) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
2. உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கைத் தேர்வு செய்து, நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷனுக்கு ஏற்ப, ஒரு UPI ஐடியை உருவாக்கவும்.
3. பிறகு, ஆதார் சரிபார்ப்பு (Aadhaar based verification) ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
4. சரிபார்க்க உங்கள் ஆதார் எண்ணின் முதல் 6 இலக்கங்களை உள்ளிட்டு, 'Confirm' என்பதைக் கிளிக் செய்யவும். பின், உங்களுக்கு விருப்பமான 4 இலக்க UPI பின்னை டைப் செய்யவும்.
5. ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP மெசேஜ் வரும். அந்த OTP ஐ அதற்குரிய இடத்தில் டைப் செய்து ‘Confirm’ என்பதைக் கிளிக் செய்யவும்.