மாதம் ரூ.5,000 மட்டும் முதலீடு செய்தால் ரூ.7.44 கோடி கிடைக்கும்! பக்கா ரிடையர்மெண்ட் பிளான் இதுதான்!

First Published Sep 16, 2024, 10:11 AM IST

SIP Retirement Planning: 25 வயதில் ரூ. 5,000 மாதாந்திர முதலீட்டை தொடங்கினால், 60 வயதில் ஓய்வு பெறும்போது ரூ. 7.4 கோடிக்கு மேல் கையில் கிடைக்கும். இதற்கு எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

Saving for Retirement

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பெருகிவரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஓய்வு பெற திட்டமிடுவது சவாலானதுதான். ஆனால் ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் ஒரு சாதாரணமான மாதாந்திர முதலீட்டை கணிசமான ரிடையர்மெண்ட் கார்பஸாக மாற்றலாம்.

Investment ideas for Retirement

25 வயதில் ரூ. 5,000 மாதாந்திர SIP முதலீட்டை தொடங்குவதன் மூலம், ஓய்வு பெறும்போது ரூ. 7.4 கோடிக்கு மேல் ஈட்டலாம். இந்த அணுகுமுறை நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கும் பாதுகாப்பான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கும் உதவும்.

Latest Videos


Retirement Corpus

25 வயது முதல் பணி ஓய்வு பெறும் 60 வயது வரை 35 ஆண்டுகள் SIP முறையில் மாதம் ரூ. 5,000 முதலீடு செய்தால், ரூ.7.43 கோடி கார்பஸை உருவாக்க முடியும். இதுவே 20 வயதில் தொடங்கினால் வெறும் ரூ. 2,500 மாதாந்திர முதலீட்டில் இந்த இலக்கை அடைய முடியும். 25 வயதில் சிப் முதலீட்டைத் தொடங்குபவர்கள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

Retirement Guide

35 ஆண்டுகளுக்கு SIP இல் ரூ. 5,000 மாதாந்திர முதலீடு என்று செய்வதாக வைத்துக்கொண்டால், மொத்த முதலீடு ரூ.21,00,000 ஆக இருக்கும். இதற்கு வருடாந்திர சராசரி வருமானம் 15 சதவீதம் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில், நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.7,22,03,225 ஆக இருக்கும். இது உங்கள் முதலீட்டின் மொத்த மதிப்பை ரூ.7,43,03,225 ஆகக் கொண்டுவரும்.

Retirement planning

பங்குகளை நேரடியாக வாங்குவதை விட பொதுவாக SIP கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறைவான அபாயத்தைக் கொண்டுள்ளது. சராசரி வருமானம் சுமார் 15 சதவீதம் கொடுக்கும் SIP முதலீடு பல அரசாங்க திட்டங்களை விட சிறப்பாக செயல்படுகின்றன.

SIP retirement plan

இந்த முதலீட்டில் காலப்போக்கில் முதலீட்டுத் தொகை கணிசமாக வளர்ச்சி அடைகிறது. நீண்ட கால SIP முதலீடு செய்வது பணத்தைப் வேகமாகப் பெருக்கி பெரிய தொகையை சம்பாதிக்க சிறந்த உத்தியாகக் கருதப்படுகிறது.

click me!