Jio Recharge: ஏர்டெல், வோடபோன் அலறவிடும் ஜியோ.! வெறும் ரூ.448-க்கு 84 நாட்கள் அன்லிமிடெட் காலிங்!

Published : Jun 11, 2026, 06:55 AM IST

Reliance Jio Offer: ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான பிளானை வழங்குகிறது. இந்த பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1000 SMS கிடைக்கும். ஆனால், இதில் இன்டர்நெட் டேட்டா கிடையாது.

PREV
15
ரிலையன்ஸ் ஜியோ

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ என்பது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகளவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியாவில் தற்போது 51 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையச் சேவையையும், ஒயர்கள் இல்லாத 5G ஏர்ஃபைபர் சேவையையும் வழங்கி வருகிறது.

25
ரிலையன்ஸ் ஜியோ அசத்தல் பிளான்

இந்நிலையில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சூப்பர் ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ அசத்தலான பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

35
84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது

அதாவது ஜியோவின் ரூ.448 பிளானை போட்டால், கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் டென்ஷன் இருக்காது. இந்த பிளானில் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், ஜியோ எல்லா நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியைத் தருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் எந்த கவலையும் இல்லாமல் பேசலாம்.

45
1000 இலவச எஸ்எம்எஸ்

இந்த பிளானில் 84 நாட்களுக்கு மொத்தம் 1000 இலவச எஸ்எம்எஸ்க்கள் வழங்கப்படுகின்றன. அதோடு, வாடிக்கையாளர்களுக்கு JioTV மற்றும் Jio AI Cloud போன்ற செயலிகளின் சேவையும் இலவசமாகக் பயன்படுத்தி கொள்ளலாம்.

55
டேட்டா பேக் ரீசார்ஜ் செய்ய வேண்டும்

ஜியோவின் இந்தத் திட்டம் ஒரு 'வாய்ஸ்-ஒன்லி' பிளான் ஆகும். எனவே, இதில் இன்டர்நெட் டேட்டா கிடைக்காது. டேட்டா பயன்படுத்துபவர்கள், தனியாக டேட்டா பேக் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories