ஜியோ IPO வருகை; முதலீட்டாளர்களுக்கு புதிய அதிரடி அறிவிப்பு!

Published : Aug 29, 2025, 04:44 PM IST

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜியோவின் IPO அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜியோ தனது IPO (Initial Public Offering) க்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.

PREV
13
ஜியோ ஐபிஓ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 29, 2025 அன்று நடந்தது. நீண்ட நாட்களாக முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பை அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். ஜியோ தனது IPO (Initial Public Offering) க்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது. 

2026 முதல் பாதியிலேயே பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது அவர் தெரிவித்தார். முகேஷ் அம்பானி, “ஐபிஓ மூலம் ஜியோ உலகளாவிய தரத்தில் மதிப்பை உருவாக்கும் திறன் கொண்ட நிறுவனம் என்பதை நிரூபிக்கிறது. வாய்ப்பு” எனக் குறிப்பிட்டார். இதனால் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

23
ஜியோ பங்கு சந்தை

ஜியோவில் மெட்டா, கூகிள் போன்ற முன்னணி சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே 20 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளன. தற்போது 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. சமீபத்தில் ஜியோ மற்றும் SpaceX (Starlink) இணைந்து செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 

ஜியோவின் எதிர்காலக் கனவு இந்தியாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதே. மொபைல், பிராட்பேண்ட் இணைப்புகளை அனைவருக்கும் அடையச் செய்வதோடு, வணிகத் துறையையும் முழுமையாக டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தில் செயல்படுகிறது.

33
ரிலையன்ஸ் ஜியோ

‘AI for everyone, Everywhere’ என்ற முயற்சியை ஊக்குவித்து, உலகளாவிய அளவிலும் விரிவடைய இலக்கு வைத்துள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஜியோவின் செயல்திறன் வலுவாக இருந்தது. நிறுவனம் ரூ.7,110 கோடி நிகர லாபம் ஈட்டியது. வருவாய் ரூ.41,054 கோடியாக 19% உயர்ந்தது. சராசரி பயனர் வருமானம் ரூ.208.8 ஆக உயர்ந்தது. 

5G பயனர் தளம் 200 மில்லியனைத் தாண்டியது. வீட்டு பிராட்பேண்ட் இணைப்புகளும் 20 மில்லியனை கடந்தன. இலவச குரல் அழைப்புகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்டார்ட்-அப் சூழல் மற்றும் AI வளர்ச்சி போன்ற மைல்கற்கள் ஜியோவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories