இருவரும் இணைந்து மஸ்ஜித் பண்டரில் ஒரு சிறிய அலுவலகத்தில் தங்கள் தொழிலைத் தொடங்கினார்கள். தனது நிறுவனத்தின் மூலம் பாலிஸ்டர் நூலை இறக்குமதி செய்து மசாலாப் பொருட்களை ஏமனுக்கு ஏற்றுமதி செய்தார். இதை தொடர்ந்து ரிலையன்ஸ் கமர்ஷியல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 350 சதுர அடி கொண்ட அவரின் அலுவலகத்தில் ஒரு தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள், இரண்டு உதவியாளர்கள் இருந்தனர். இந்த காலகட்டத்தில், அம்பானியும் அவரது குடும்பத்தினரும் மும்பையின் புலேஷ்வரில் உள்ள ஜெய் ஹிந்த் எஸ்டேட்டில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினர்.