8th Pay Commission 44% of Salary Hike
மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழு அமலாக்கத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும், ஊழியர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.
8th Pay Commission
இந்த நிலையில் 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. 8வது ஊதியக் குழுவை அமைக்கக் கோரியும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஊழியர் சங்கங்கள் மற்றும் அரசு அமைப்புகள் நிதி அமைச்சகத்துக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளன. அடுத்த சம்பள கமிஷன் அமைத்தால், நிதி ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Central Government
ஏற்கனவே நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதனும் சில நாட்களுக்கு முன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதற்கிடையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பாக ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது ஊதியக்குழு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், புதிய ஊதியக்குழு அமைப்பது தொடர்பாக ஊழியர் சங்கங்களிடமிருந்து கடிதங்கள் மற்றும் மனுக்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
Salary Hike
முன்னதாக, பட்ஜெட்டுக்கு பின், நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 8வது சம்பள கமிஷனை அமல்படுத்த இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்த அறிக்கையை உன்னிப்பாக கவனித்தால், சிறிது காலம் கழித்து இது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.