வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்

Published : Feb 12, 2026, 01:30 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை முன்மொழிந்துள்ளது. இந்த விதிகள் 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம். இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக மாறியுள்ளது.

PREV
15
ஆர்பிஐ புதிய விதிகள்

வங்கியில் கடன் பெறச் சென்றபோது, ​​அதனுடன் காப்பீடு, கிரெடிட் கார்டு போன்ற சேவைகளும் ஒரே கிளிக்கில் சேர்க்கப்பட்ட அனுபவம் பலருக்கு இருக்கலாம். இத்தகைய தவறான விற்பனை முறைகளை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை முன்மொழிந்துள்ளது. இவை 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என திட்டமிடப்பட்டுள்ளது.

25
வங்கி வாடிக்கையாளர்

இனி வங்கிகள் எந்த ஒரு சேவையையும் வாடிக்கையாளர் தெளிவான மற்றும் தனித்தனி ஒப்புதல் இன்றி வழங்க முடியாது. முன்பு டிஜிட்டல் விண்ணப்பங்களில் “நான் ஒப்புக்கொள்கிறேன்” போன்ற ஒரு பட்டனை அழுத்தினால் பல சேவைகளுக்கு ஒரே நேரத்தில் அனுமதி வழங்கப்படும். இதனால் பலர் அறியாமலே காப்பீடு அல்லது கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொண்டனர்.

35
வங்கி மிஸ்செல்லிங்

புதிய விதிகளின்படி, ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனித்தனி, தெளிவான ஒப்புதல் அவசியம். மேலும், வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் பொருளாதார நிலையைப் பொருத்தே தயாரிப்புகள் வழங்கப்பட வேண்டும். குறைந்த வருமானம் கொண்டவருக்கு முதலீட்டு திட்டம் விற்பனை செய்வது “மிஸ்செல்லிங்” எனக் கருதப்படும். வங்கி வழங்கும் தயாரிப்பு அதே வங்கியின் சேவை அல்லது வேறு நிறுவனத்தின்தா என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

45
ஒரே கிளிக் ஒப்புதல் தடை

"டார்க் பேட்டர்ன்ஸ்" எனப்படும் தவறான டிஜிட்டல் யுக்திகளுக்கும் ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. வங்கிகள் தங்களின் செயலிகள் மற்றும் இணையதளங்களை சீராய்வு செய்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். வங்கியின் முகவர்கள் தொடர்பாகவும் புதிய பொறுப்புகள் விதிக்கப்பட்டுள்ளன.

55
தவறான விற்பனை நிரூபிக்கப்பட்டால்

மூன்றாம் தரப்பு முகவர்கள் என்றால் அதை தெளிவாக அறிவிக்க வேண்டும். தவறான விற்பனை நிரூபிக்கப்பட்டால், வங்கி வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி வழங்கி இழப்பீடு அளிக்க வேண்டும். இந்த வரைவு விதிமுறைகள் குறித்து 2026 மார்ச் 4 வரை கருத்துக்கள் பெறப்பட்டு, பின்னர் இறுதி விதிகள் அமலுக்கு வரும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories