பேங்க் சுற்ற வேண்டாம்… வட்டி செலுத்த வேண்டாம்… மோடி அரசின் அதிரடி கடன் திட்டம்!

Published : Feb 12, 2026, 09:10 AM IST

மத்திய அரசு, தொழில் தொடங்குதல், விவசாயம் மற்றும் கல்வி போன்ற தேவைகளுக்காக பல்வேறு கடன் திட்டங்களை வழங்குகிறது. குறைந்த வட்டி அல்லது வட்டியில்லா கடன்களைப் பெற்று மக்கள் பயனடையலாம்.

PREV
15
வட்டியில்லா கடன்

தனியாக தொழில் தொடங்க வேண்டும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வட்டி சுமை காரணமாக பலர் கடன் எடுக்க வேண்டும் தயங்குகின்றனர். ஆனால் மத்திய அரசு செயல்படுத்தும் சில திட்டங்கள் மூலம் குறைந்த வட்டி அல்லது வட்டியில்லா கடன் பெறும் வாய்ப்பு பலருக்கும் தெரியாது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இந்த திட்டங்கள் உதவுகின்றன.

25
அரசு கடன் திட்டங்கள்

நகர்ப்புறங்களில் தள்ளுவண்டி, தெருவோர விற்பனையாளர்கள் போன்றோருக்கு உதவியாக பிஎம் ஸ்வநிதி திட்டம் செயல்படுகிறது. ஆரம்பமாக ரூ.10,000 கடன் வழங்கப்படுகிறது. அதை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை உயர்த்திக் கொள்ளலாம். 7% வரை வட்டி சலுகை வழங்கப்படுவதால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கிடைக்கும் கேஷ்பேக் சேர்ந்து, இந்த கடன் மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கிறது.

35
பிஎம் விஸ்வகர்மா யோஜனா

பிஎம் விஸ்வகர்மா யோஜனா பாரம்பரிய தொழிலாளர்களுக்கான திட்டமாகும். குயவர்கள், தச்சர்கள், பொற்காரர்கள் உள்ளிட்ட 18 தொழில்களுக்கு இது பொருந்தும். சந்தை வட்டி அதிகமாக இருந்தாலும், 5% மட்டுமே பயனாளி செலுத்த வேண்டும்; மீதியை அரசு மானியமாக வழங்குகிறது. அடமானம் தேவையில்லை. பயிற்சி மற்றும் கருவிகள் வாங்க நிதி உதவியும் கிடைக்கும்.

45
கிசான் கிரெடிட் கார்டு

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் முக்கியமானது. சாதாரணமாக 9% வட்டி இருந்தாலும், அரசின் சலுகையால் 7% ஆக குறைகிறது. கடனை காலத்திற்கு திருப்பிச் செலுத்தினால் கூடுதல் 3% சலுகை வழங்கப்படுகிறது. சில மாநில ஊக்கத்தொகைகள் சேர்ந்து, இது வட்டியில்லா கடனாக மாறுகிறது.

55
கல்விக் கடன் மானியம்

மேலும், பொருளாதார ரீதியாக பலவீனமான மாணவர்களுக்கு கல்விக் கடனில் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. படிப்பு காலத்தில் வட்டியை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. விண்ணப்பிக்க ஜன சமர்த் தளம் உதவுகிறது. ஆதார், வங்கி கணக்கு, தொழில் சான்று போன்ற ஆவணங்கள் அவசியம். தவணை தாமதமானால் மானியம் ரத்து செய்யப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories