லோன் கிடைக்கலயா? கிரெடிட் கார்டு ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்த 5 ரகசிய டிப்ஸ் இதோ!

Published : Feb 11, 2026, 08:43 PM IST

Improve Your Credit Score Quickly: Tips Here: இந்த செய்தியில் கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்தும் 5 வழிகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
13
கிரெடிட் கார்டுகள்

அத்தியாவசிய தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகள் கைகொடுத்து வருகின்றன. அவசரத் தேவைகளுக்கு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் பணம் கிடைக்காத நிலையில் கிரெடிட் கார்டுகள் உதவி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை திருப்பி செலுத்துவது அவசியம். இல்லாவிடில் அது உங்களின் கிரெடிட் கார்டு ஸ்கோரை பாதிக்கும். இதனால் லோன் கிடைப்பதும் மிகவும் கடினமாகி விடும்.

ஏனெனில் கிரெடிட் கார்டு ஸ்கோர் என்பது நீங்கள் எந்த அளவுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பகத்தன்மையைக் குறிக்கும் ஒரு எண் ஆகும். இது கடன் அனுமதி, வட்டி விகிதங்களை நேரடியாகப் பாதிக்கிறது. ஆகவே கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்தும் 5 வழிகள் குறித்து பார்க்கலாம்.

23
சரியான நேரத்தில் பில் செலுத்த வேண்டும்

கிரெடிட் கார்டு ஸ்கோரில் மிக முக்கியமான அம்சம் நீங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துகிறீர்களா என்பதுதான். ஒரு முறை தவறினாலும், அது பல ஆண்டுகளுக்கு ஸ்கோரை பாதிக்கும். ஆகவே சரியான குறிப்பிட்ட நேரத்தில் பணம் செலுத்துவது மிகவும் அவசியம்.

மொத்த லிமிட்டில் 30%-க்கு மேல் செலவு செய்யாதீர்கள்

உங்களுக்குக் கிடைக்கும் மொத்தக் கடனில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் குறிக்கும் சதவீதம் இது. மொத்த லிமிட்டில் 30%-க்கு மேல் செலவு செய்யாதீர்கள். அதிகமாகப் பயன்படுத்துவது நிதி நெருக்கடியைக் குறிக்கலாம். செலவுகளைக் கண்காணிப்பதன் மூலமும், சரியான நேரத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்துவதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

33
பழைய கணக்குகளை மூட வேண்டாம்

நீங்கள் எவ்வளவு காலமாகக் கடன் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் கிரெடிட் கார்டு ஸ்கோரில் ஒரு பங்கு வகிக்கிறது. பழைய கணக்குகளை மூடாமல், அவற்றில் குறைந்தபட்ச நடவடிக்கைகளை வைத்திருப்பதன் மூலம் நீண்ட கடன் வரலாற்றைப் பேணலாம். இவற்றின் விவரங்களையும் அறிந்து வைத்திருப்பதும் மிகவும் முக்கியமாகும்.

குறுகிய காலத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம்

புதிய கடனுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் கடன் அறிக்கையில் ஒரு விசாரணையைஏற்படுத்தும். 6 மாதங்களில் பல விசாரணைகள் இருந்தால், கிரெடிட் கார்டு ஸ்கோர் குறையக்கூடும். தேவைப்படும்போது மட்டும் விண்ணப்பிப்பது நல்லது.இந்த ஐந்து அம்சங்களைப் புரிந்துகொண்டு பின்பற்றினால், உங்கள் கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்தி, சிறந்த நிதி வாய்ப்புகளைப் பெறலாம்.

வட்டி விகிதம் குறைவாக உள்ள கார்டு

கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். ஆகவே வட்டி விகிதம் குறைவாக உள்ள கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஒவ்வொரு கிரெடிட் கார்டுடன் தொடர்புடைய கட்டணங்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories