ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா
இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் அதே தொடரில் முந்தைய வெளியீடுகளிலிருந்து பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், புதிய ஆளுநரின் கையொப்பத்தைச் சேர்ப்பது அவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் குறிப்பிடத்தக்க அப்டேட்டை குறிக்கிறது. மகாத்மா காந்தி (புதிய) தொடரில் காணப்படுவது போல் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் தற்போதுள்ள அனைத்து வடிவமைப்பு அம்சங்கள் உடன் வரும் என்பதை மத்திய வங்கி உறுதிப்படுத்தியது. இதன் பொருள், வடிவமைப்பு, வண்ணம் மற்றும் காட்சிகள் முந்தையதைப் போலவே இருக்கும்.