வங்கியில் ரூ.5 லட்சத்துக்கு மேல் FD இருக்கா? சிக்குவீங்க RBI விதிகளை படிங்க முதல்ல!!

First Published | Sep 19, 2024, 10:48 AM IST

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் கணக்கில் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியின் விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

RBI

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் கணக்கில் செய்யும் முதலீடுகள் பாதுகாப்பானவையாக அனைவராலும் கருதப்படுகின்றன. FD பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் பிக்ஸ்ட் டெபாசிட் செய்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வங்கியில் பிக்ஸ்ட் டெபாசிட் செய்தால் நிலையான வருமானம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், சில சந்தர்ப்பங்களில் வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களும் பாதுகாப்பானவை இல்லை. வங்கி திவாலானால் என்ன செய்வது? ஒரு வங்கி திவாலானால் பிக்ஸட் டெபாசிட்டில் உள்ள பணம் பாதுகாப்பாக இருக்குமா? சிறிய அளவில் டெபாசிட் செய்தால் பரவாயில்லை, லட்சங்களில் டெபாசிட் செய்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் பிக்ஸட் டெபாசிட் தொடர்பான ரிசர்வ் வங்கி விதிகளைக் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Tap to resize

வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் கேரண்டி திட்டத்தை கொண்டுவந்துள்ளது. பல வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் உள்ளது என்பதுகூட தெரியாது. வங்கிகளும் இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதில்லை. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காப்பீட்டை வழங்குகிறது.

டிஐசிஜிசி மூலம் வங்கி டெபாசிட் பணத்திற்கு காப்பீட்டுத் தொகை உறுதி செய்யப்படுகிறது. ஒரு வங்கி திவாலாகி மூடப்படும் நிலை ஏற்படுகிறது என்றால், இந்தக் காப்பீட்டின் பலன் கிடைக்கும். ஆனால் இதற்கும் ஒரு எல்லை உண்டு. உங்கள் வைப்புத்தொகை ரூ.5 லட்சம் வரை இருந்தால் மட்டுமே காப்பீட்டின் கவரேஜ் கிடைக்கும். அதுவும் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சம் வரை இருந்தால் தான் டிஐசிஜிசி காப்பீட்டைப் பெறலாம்.

திவாலான வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்பை  இந்தக் காப்பீடு ஈடுசெய்ய முயல்கிறது. டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் கேரண்டி மூலம் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறத் தகுதி இருப்பவர்கள் விண்ணப்பித்து அந்தத் தொகையைப் பெற வேண்டும். விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். உதாரணமாக, ரூ.5 லட்சத்திற்கு மேல் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தான் கிடைக்கும். அதற்கு மேல் டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி முழுவதையும் இழக்க வேண்டியதுதான்.

ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் செய்யப்படும் மொத்த டெபாசிட்களும் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு இந்தக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. வெவ்வேறு கிளைகளில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்திப்பதால், தனித்தனியாகக் கணக்கிடப்படாது. ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வரைக்குமான பிக்ஸட் டெபாசிட்டுக்குத்தான் காப்பீடு உள்ளது. இதனால்தான் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் முன் ஆர்பிஐ விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். பணத்தை வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு திட்டங்களில் டெபாசிட் செய்தால், முதலீடு செய்த பணத்திற்கு முழுமையாக காப்பீடு கிடைக்கும். இந்தக் காப்பீட்டுக்கு எந்த பிரீமியமும் செலுத்த தேவையில்லை. அந்தந்த வங்கிகளே செலுத்திவிடும்.

Latest Videos

click me!